நிக்கோன் கமரா மற்றும் படப்பிடிப்பு உபகரணங்களுக்கான கிழக்கு மாகாண விநியோகஸ்தராக சாந்தன் வீடியோ அன்ட் போட்டோ நிறுவனம்

போட்டோ ரெக்னிக்கா நிறுவனத்தின் நிக்கோன் கமரா மற்றும் படப்பிடிப்பு உபகரணங்களுக்கான கிழக்கு மாகாணத்திற்கான உத்தியோகபூர்வ விநியோகஸ்தராக மட்டக்களப்பு சாந்தன்ஸ் வீடியோ அன்ட் போட்டோ நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் 38வருட காலமாக புகைப்படம் மற்றும் வீடியோ தயாரிப்பு நிறுவனமாக தனக்கென தனி இடத்தினைக்கொண்டுள்ள மட்டக்களப்பு சாந்தன்ஸ் வீடியோ அன்ட் போட்டோ நிறுவனம் திகழ்ந்துவருகின்றது.

இதற்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் நிக்கோன் கமரா மற்றும் படப்பிடிப்பு உபகரணங்களுக்கான கிழக்கு மாகாணத்திற்கான உத்தியோகபூர்வ விநியோகஸ்தராக மட்டக்களப்பு சாந்தன்ஸ் வீடியோ அன்ட் போட்டோ நிறுவனம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான நிகழ்வு அண்மையில் சாந்தன்ஸ் வீடியோ அன்ட் போட்டோ நிறுவனத்தில் நடைபெற்றது.

இலங்கையின் நிக்கோன் தயாரிப்புக்கான முகவரான போட்டோ ரெக்னிக்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மனுசவிகரமசிங்க,சந்தைப்படுத்தல் முகாமையாளர் ஜீவிதா சிவநாதன் ஆகியோருடன் அகில இலங்கை ஸ்ரூடியோ உரிமையாளர் சங்க தலைவர் வசந்த அபயகோன்,செயலாளர் டிக்சன் அபேயசிங்க,இலங்கை ஸ்ரூடியோ உரிமையாளர் சங்கத்தினை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.