“ இந்து விழி “கணித பாட செயலேடு வழங்கும் நிகழ்வு

(லியோன்)

க பொ.த .சாதாரண தரம் மாணவர்களுக்கான கணித பாட செயலேடு வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பில்   நடைபெற்றதுமட்டக்களப்பு கல்வி வலய அலுவலகம்  மற்றும் மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலைகளின் அதிபர்களின் ஏற்பாட்டில்  மட்டக்களப்பு  வலயக் கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன்  தலைமையில் க .பொ .த . சாதாரண தரம் கணித பாட  மாணவர்களுக்கான  இந்து விழி “கணித பாட செயலேடு வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு இந்து  கல்லூரி பிரதான மண்டபத்தில்  நடைபெற்றது .

யாழ் இந்துகல்லுரி  பழைய மாணவர்களின்   அனுசரணையில் 2017 ஆம் ஆண்டு கல்வி பொது தரம் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள  மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது  

மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலை  மாணவர்களின் கணித பாடத்தினை மேம்படுத்தும் நோக்கில் “ரேஸ் போ  எடிவுகேஷன் “ ( கல்விக்கான ஓட்டம் ) திட்டத்தின் கீழ் இக்கையேட்டினை  பாடசாலை மாணவர்களுக்கு மூன்றாது வருடமாக  யாழ் இந்து கல்லூரி  பழை மாணவர்களின்   இலவசமாக வழங்கப்படுகின்றது இந்நிகழ்வில் மட்டக்களப்பு  வலயக் கல்விப்பணிப்பாளர்கள் கே .பாஸ்கரன் ,கோட்டக்கல்விப் பணிப்பாளர் எ .சுகுமாரன் மற்றும் மட்டக்களப்பு கல்வி வலய   வலயக்கல்வி பணிப்பாளர்கள் ,    வலய பாடசாலைகளின் அதிபர்கள், பாடசாலைகளின் கணித பாட  ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் .