குழந்தை யேசு பாலர் பாடசாலை சிறார்களின் கண்காட்சி

 (லியோன்)

மட்டக்களப்பு குழந்தை யேசு பாலர் பாடசாலை சிறார்களின் சித்திர ,கைப்பணி பொருட்களின் கண்காட்சி இன்று நடைபெற்றது .மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு குழந்தை யேசு பாலர் பாடசாலை சிறார்களின் சித்திர ,கைப்பணி பொருட்களின் கண்காட்சி பாடசாலை அதிபர் அருட்சகோதரி அலன்   தலைமையில்  பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

சிறார்களின் ஆற்றல் திறன் மற்றும் அவர்களின் அறிவு சார்ந்த விடயங்களை  ஊக்குவிட்கும் நோக்காக கொண்டு பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்களிப்புடன் பாலர் பாடசாலையின் சிறார்களின் கைப்பணி பொருட்களின் கண்காட்சி இன்று நடைபெற்றதுஇந்த கண்காட்சி  நிகழ்வில் விருந்தினர்களாக மட்டக்களப்பு மறைமாவட்ட குரு முதல்வர் எ .தேவதாசன் , மட்டக்களப்பு கல்வி வலய உதவிக்கல்விப் பணிப்பாளர் புவிராஜ் ,மற்றும் அருட்சகோதரிகள , பாடசாலை ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் கலந்துகொண்டனர் .