வறுமைக்கோட்டிற்குட்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!


(மண்டூர் நிருபர்) உலகத் தமிழ் மாணவர் ஒன்றியத்தின் வேண்டுகோளிற்கு இனங்க ஜேர்மன்-உதயம் சமூகசேவை அமைப்பினரால் மிகவும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. 

முல்லைத்தீவு மாவட்டத்தின் மூங்கிலாறு கிராமத்தில்  இன்று(15/08/2017) இந் நிகழ்வு உதயம் சமூக தொண்டு அமைப்பின் வடபிராந்திய இணைப்பாளரும் உலகத் தமிழ் மாணவர் ஒன்றியத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தின் இணைப்பாளருமான எஸ்.ரீ.பிரனீவ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் உலகத் தமிழ் மாணவர் ஒன்றியத்தின் பொதுச்செயலாளரும் ஜேர்மன்-உதயம் சமூகசேவை அமைப்பின் கிழக்கு மாகாண இனைப்பாளருமான ஏ.யோன்சன் Tamil Peoples Aid அமைப்பின் பணிப்பாளர் பொறியியலாளர் கே.அனித்தன் மற்றும் கிராம சமூர்த்தி உத்தியோகத்தர் தினேஷ்,கிராம பெண்கள் அபிவிருத்தி சங்க தலைவி கலைச்செல்வி,பொருளாளர் சுதா,மற்றும் பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இவ் நிகழ்வில் உரையாற்றிய மாணவர் ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் ஏ.யோன்சன்  வடகிழக்குப் பகுதிகளில் தமிழ் சமுதாயத்தின் கல்வி,கலை,கலாச்சார,பண்பாட்டு விழுமியங்களை  கட்டி எழுப்பும் நோக்கில் உலகத் தமிழ் மாணவர் ஒன்றியம் தொடர்ந்தும் பயணிக்கும் என நம்பிக்கை அளித்ததுடன். உதயம் சமூக தொண்டு அமைப்பின் வட பிராந்திய இணைப்பாளர் எஸ்.ரீ.பிரனீவ் உரையாற்றும் போது மாணவர்களினுடைய கல்வித் தரத்தை உயர்த்துவதன் மூலம் எமது சமுதாயத்தை முன்னேற்ற முடியும் என்று கருத்து தெருவித்ததுடன்  மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில்  ஜேர்மன்-உதயம் சமூகசேவை அமைப்பிற்கும் உலகத் தமிழ் மாணவர் ஒன்றியத்திற்கும் நன்றிகள் தெருவிக்கப்பட்டன.