நீச்சல் பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

(லியோன்)

நீச்சல் பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு காத்தான்குடியில் நடைபெற்றது 


இலங்கை நீச்சல் பயிற்சியாளர் சங்கத்துடன் காத்தான்குடி பீச்வே ஹோட்டல் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் நீச்சல் பயிற்சிகளை ஊக்குவிக்கும்  நோக்காக கொண்டு நீச்சல் பயிற்சிகளை நடத்தப்பட்டு வருகின்றன .

நடத்தப்பட்ட நீச்சல் பயிற்சிகளில் பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான இறுதி  போட்டியும் , போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இலங்கை நீச்சல் பயிற்சியாளர் சங்கத்தினால் சான்றிதழ்கள்  வழங்கும் நிகழ்வு  (06)  மாலை காத்தான்குடி பீச்வே நீச்சல் தடாக வளாகத்தில் நடைபெற்றது .


காத்தான்குடி பீச்வே இணைப்பாளர் எம்.எ.எம் முபீன் ஒழுங்கமைப்பில் இலங்கை நீச்சல் பயிற்சியாளர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பயிற்சியாளர் தெட்சணாமூர்த்தி ராஜசெல்வன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் காத்தான்குடி பாடசாலை அதிபர்கள் மற்றும் போட்டியாளர்களின் பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர் .