காணவில்லை. குறுமன்வெளியைச்சேர்ந்த பாடசாலை மாணவிகள் இருவரை கடந்த மூன்று நாட்களாக காணவில்லை.


(சசி துறையூர்) எங்களது பிள்ளைகளை எங்கிருந்தாலும் மீட்டுத்தாருங்கள், பொற்றோர் கண்ணீருடன் மன்றாடுகின்றனர்.

 குறுமண்வெளியைச் சேர்ந்த பாடசாலை மாணவிகள் இருவர் கடந்த சனிக்கிழமை முதல் காணமல் போயிள்ளனர்.

குறுமண்வெளி சிவசக்தி மாகா வித்தியாலயத்தில்  ஒரே வகுப்பில் கல்வி கற்கும், இம் முறை கல்விப்பொதுத்தராதர பரீட்சைக்கு தோற்றும் மாணவிகளான இவர்கள் மூன்று நாட்களாக வீடு வந்து சேரதாதையிட்டு பொற்றோர் ஏக்கத்துடன் தேடிவருகின்றனர்.


 காணமல் போயுள்ள மாணவிகளில் ஒருவர் பிரத்தியோக வகுப்புக்கு செல்வதாக தாயிடம் கூறி கடந்த சனிக்கிழமை காலையில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார், மற்றைய யுவதி கோவிலுக்கு செல்வதாக வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

பிள்ளைகள்  நண்பகல் தாண்டியும் வீடு வந்து சோராவில்லை இதனைத்தொடர்ந்து பெற்றோர் களுவாஞ்சிகுடி பொலிஸ்லிம் முறைப்பாடு செய்துள்ளனர்.

வீட்டைவிட்டு சென்ற யுவதி ஒருவர்  தனது தயாயின் கையடக்க தொலைபேசியையும் எடுத்துச்சென்றுள்ளார். அந்த தொலைபேசிக்கு அழைப்பை மேற்கொண்ட போது சிங்களத்தில் ஒரு நபர் பதிலளித்ததாகவும் அந்த  தொலைபேசி இன்று நண்பகலின் பின்னர் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.