மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவ திருச்சீட்டு நிகழ்வு-2017.மட்டக்களப்பு  மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு திருச்சீட்டு எழுதும் நிகழ்வு இன்று(07) மு.ப9.30 மணியளவில் ஆலய முன்றல் சித்திரக்கதை வம்மி நிழலில் ஆலய வண்ணக்கர் பொ.செல்வக்குமார் தலைமையில் ஆரம்பமானது.

இந்நிகழ்வில் மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த திருக்கொடியேற்றம் எதிர்வரும் 17.08.2017(வியாழக்கிழமை) அன்று ஆரம்பமாகி தீர்த்தோற்சவம் 06.09.2017(புதன்கிழமை)ம் திகதி இடம் பெறும் என்று அறிவித்தல் விடுக்கப்பட்டதோடு இறுதியாக நன்றியுரையுடன் இந்நிகழ்வு நிறைவு பெற்றது.
Add caption