மாவீரர்,முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கு உதவி

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர்களின் குடும்பங்களுக்கு உலர்உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் இந்த உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு உப்புக்கராச்சியில் உள்ள லயன்ஸ் கழக மண்டபத்தில் நடைபெற்றது.

ஜனநாயக போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களுக்கான பிராந்திய இணைப்பாளர் க.பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஜனநாயக போராளிகள் கட்சியின் பொதுச்செயலாளர் கதிர்,கொள்கை முன்னெடுப்பு செயலாளர் கர்த்தகன்,ஊடக செயலாளர் துளசி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் புளியந்தீவு மெடிஸ்த ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்திரு குணாளன் அடிகளார்,மாவட்ட செயலக சித்திவிநாயகர் ஆலய குரு ஜெகதீஸ்வர சர்மா உட்பட ஆன்மீக அதிதிகளும் கலந்துகொண்டனர்.

இதன்போது மிகவும் வறுமை நிலையில் உள்ள 30 முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர்கள் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர்கள்,முன்னாள் போராளிகளின் உறவினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.