2017 -2018 ஆண்டுக்கான புதிய பாடுமீன் லயன்ஸ் கழக தலைவர் பதவி பிரமாண நிகழ்வு

(லியோன்)

மட்டக்களப்பு   பாடுமீன் லயன்ஸ் கழக    ஆண்டு நிறைவு நிகழ்வும் 2017 -2018 ஆண்டுக்கான புதிய பாடுமீன் லயன்ஸ் கழக தலைவர் பதவி பிரமாண நிகழ்வும்  மட்டக்களப்பில் நடைபெற்றது .


மட்டக்களப்பு மாவட்டத்தின்  மட்டக்களப்பு பாடுமீன் அரிமா  லயன்ஸ் கழகத்தின்  02வது ஆண்டு நிறைவு விழாவும் மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழகத்திற்கான 2017 -2018 ஆண்டுக்கான புதிய தலைவருக்கான பதவி பிரமாண நிகழ்வும் பாடுமீன் லயன்ஸ் கழக  தலைவர்  அரிமா ஜி ஜே .ஆனந்தன் தலைமையில் (06)  மாலை  நடைபெற்றது . 
நடைபெற்ற இந்நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக  பாடுமீன் லயன் உறுப்பினர்களினால் அதிதிகளான சிரேஷ்ட  லயன் கழக உறுப்பினர்களுக்கு  மலர் மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டனர் .

இதனை தொடர்ந்து கழக உறுப்பினர்களின் சத்திய பிரமான நிகழ்வும் புதிய அங்கத்தவர்கள்  அறிமுக  நிகழ்வுகளும் இதனை தொடர்ந்து பாடுமீன் லயன்  அங்கத்தவர்களை கௌரவித்து விருதுகள் வழங்கும் நிகழ்வும்   நடைபெற்றது . 

இதனை தொடர்ந்து புதிய லயன்ஸ் கழக தலைவராக லயன் அரிமா பி .ஜி .டேவிட் தலைவராக தெரிவு செய்யப்பட்டார் .

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சிரேஷ்ட லயன்ஸ் கழக லயன்  டி .அருணகிரிநாதன்   மற்றும்  லயன்ஸ் கழக தலைவர்கள் , புதிய  லயன்  உறுப்பினர்கள் ,  பெண் லயன் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர் ,

மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழக  02 வது ஆண்டு நிறைவு நிகழ்வும் 2017 -2018 ஆண்டுக்கான புதிய பாடுமீன் லயன்ஸ் கழக தலைவர் பதவி பிரமாண  நிகழ்வில் ஊடகவியலாளர்கள் , அழகுக்கலை கலைஞர்கள்  , சமூக சேவை ஆள்வாளர் விமோச்சனா இல்ல தலைவி ஆகியோர்   கௌரவிக்கப்பட்டமை   குறிப்பிடத்தக்கது