திராய்மடு அருள்மிகு ஸ்ரீ முருகன் ஆலய மகோற்சவ பெருவிழாவின் தீர்த்தோற்சவம்

(லியோன்)


மட்டக்களப்பு பாலமீன்மடு -  திராய்மடு அருள்மிகு ஸ்ரீ  முருகன்    ஆலய மகோற்சவ பெருவிழாவின்  தீர்த்தோற்சவம் இன்று கோலாகலமாக  நடைபெற்றது .மட்டக்களப்பு மாவட்டத்தில்  வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களுள் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு பாலமீன்மடு -  திராய்மடு அருள்மிகு ஸ்ரீ  முருகன்  ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தோற்சவம்  நூற்றுக்கணக்கான  அடியார்கள் புடை சூழ  இன்று கோலாகலமாக நடைபெற்றது .

மட்டக்களப்பு பாலமீன்மடு -  திராய்மடு அருள்மிகு ஸ்ரீ  முருகன்   ஆலய மகோற்சவ பெருவிழா  கடந்த 29ஆம்  திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது

ஆலய மஹோற்சவகாலங்களில் ஆலய பிரதம  குரு சிவஸ்ரீ  பிரதீபன் சர்மா தலைமையில் தினமும் தம்ப பூஜை ,வசந்த மண்டப பூஜை மற்றும் சுவாமி உள்வீதி, வெளி வீதியுலா நடைபெற்றது .

இன்று காலை விநாயர் வழிபாடுகளுடன் உற்சவகால கிரியைகள் ஆரம்பமானதுடன் விசேட யாக பூசை  மற்றும் அபிசேக பூஜை, வசந்த மண்டப பூஜை நடைபெற்று  ஆலய மஹோற்சவத்தின்  தீர்த்தோற்சவம் நூற்றுக்கணக்கான   அடியார்கள் புடை சூழ வேத ,நாத, மேளங்களுடன் அடியார்களின் ஆரோகரா கோசங்களுடன்  கோலாகலமாக   இந்து சமுத்திரத்தில்  நடைபெற்றது .

மாலை   நடைபெறவுள்ள உற்சவகால கிரியைகளுடன் ஆலய மகோற்சவ பெருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவுபெறும் .