மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் 13ம் நாள் திருவிழா.

(மண்டூர் நிருபர்) தில்லை மண்டூர் கந்தசுவாமி கோயிலைக் கொண்டது மண்டூர் என்னும் திருப்பதி,
மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் இன்று(29) 13ம் நாள் திருவிழா இடம்பெற்றது.

இத்தகைய திருப்பதி விபுலாந்த அடிகளாரால் 'மண்டூர்' என்னும் புண்ணிய பழம்பெரும் பதி என்று பாராட்டப்பட்டதாகும்.இவ் திருவிழா நிகழ்வில் விநாயகப் பெருமான் மூஷிக வாகனத்திலும் முருகப் பெருமான் புஷ்பக வாகனத்திலும் வீதியுலா வருவதைக் காணலாம்.அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியின் அருள் வேண்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.