புளியந்தீவு ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

(லியோன்)

மட்டக்களப்பு- புளியந்தீவு வாவிக்கரை வீதி ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று  சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
விசேட யாக பூஜை மற்றும் அபிசேகம் நடைபெற்று பிரதான கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு மூல மூர்த்தி முருகனுக்கு  அபிசேகம் செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து தம்பத்து விநாயகருக்கு விசேட பூஜைகள் நடைபெற்று கொடிச்சீலை ஆலய வீதியுலா வலம் வந்து கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.

கொடியேற்றத்தினை தொடர்ந்து தம்பித்திற்கு விசேட அபிசேகம் ஆராதனைகள் நடைபெற்றதுடன் முருக்பெருமானுக்கும் விசேட பூஜைகள் நடைபெற்று வீதியுலாவும் நடைபெற்றது.

வருடாந்த மஹோற்சவத்தில் எதிர்வரும் 06ஆம் திகதி தேர்த்திருவிழா நடைபெறவுள்ளதுடன் மறுதினம் தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது