ஒசானம் விசேட தேவையுடைய மாணவர்களின் வருடாந்த விளையாட்டு போட்டி

(லியோன்)


சந்துருக்கொண்டான் ஒசானம் நிலைய விசேட தேவையுடைய மாணவர்களின் வருடாந்த விளையாட்டு போட்டி நிகழ்வுகள்  ஒசானம் நிலைய வளாகத்தில்  நடைபெற்றது


மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட சந்துருக்கொண்டான் ஒசானம் நிலைய விசேட தேவையுடைய மாணவர்களின் வருடாந்த விளையாட்டு போட்டி நிகழ்வுகள்  அருட்சகோதரி  டிலானி  தலைமையில்  புனித வின்சென்ட்  டீ பவுல்  ஏற்பாட்டில் ஒசானம் நிலைய வளாகத்தில் (29) சனிக்கிழமை  மாலை  நடைபெற்றது   

விசேட தேவையுடைய மாணவர்களின் திறன்களை விருத்தி செய்யும் நோக்கில் நிலைய ஆசிரியர்களினால் மாணவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு மாணவர்களின் விசேட வினோத விளையாட்டு நிகழ்வுகள்  நடைபெற்றது.


இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக  மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா  ஜோசப் ,அதிதிகளாக கிழக்குமாகாண விவசாய அமைச்சர் கே .துரைராஜசிங்கம் , கிழக்குமாகாண சபை பிரதி தவிசாளர்  இந்திரகுமார் பிரசன்னா , மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மனநல வைத்திய நிபுணர் வைத்தியர் கடம்பநாதன் , குழந்தை நல வைத்திய நிபுணர் திருமதி .கடம்பநாதன்  மற்றும் அருட்தந்தையர்கள் , அருட்சகோதரிகள் , நிலைய ஆசிரியர்கள் , மாணவர்கள் , மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டார் .