அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் வித்தியாலய மாணவர்களின் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

(லியோன்)

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் மூன்று நாட்கள் விசேட டெங்கு ஒழிப்பு  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .


இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்ட கல்வி வலயங்களில் இந்த செயல் திட்டங்கள்  பாடசாலை  மட்டத்தில் டெங்கு ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு  நடவடிக்கையாக  மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர் .

இதற்கு அமைய பாடசாலை வளாகத்தில் பயன்பாட்டில் இல்லாத மலசல கூடத் தொகுதிகளை அகற்றல் ,
உடைந்துள்ள பொருட்களை பொருத்தமானவாறு முகாமைத்துவப்படுத்தல் ,
பாதியளவு முடிக்கப்பட்டுள்ள கொங்ரீட் கூரைகளில் நீர் தேங்கி நிற்காதவாறு திருத்துதல் ,
மலசல கூடங்கள் அண்மித்த நுளம்பு பெருகக்கூடிய இடங்களைச் சீர் செய்தல் .
பாடசாலைச் சூழலிலுள்ள நீர் தேங்கி நிற்கும் இடங்கள் உரிய முறையில் முகாமைத்துவப்படுத்தல் ,
மழைப் பீலிகளைச் சுத்தம் செய்வதுடன் அபாயமுள்ள மழைப் பீலிகளை அகற்றல் போன்றவற்றை  நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன

இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் கீழ் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் வித்தியாலயத்தில்  அதிபர்  திருமதி .என் .தர்மசீலன்  தலைமையில் இன்று முன்னெடுக்கப்பட்டன    .


இந்த டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கையில்  பாடசாலை ஆசிரியர்கள்,  மாணவர்களை ,பெற்றோர்கள் கலந்துகொண்டனர்