பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு
தமிழ்த் தேசிய மாணவர் பேரவையின் ஏற்பாட்டில் Vision Launch IVL பிரதான அனுசரனையிலும்
Future Mind ஒழுங்கமைப்பிலும்
மட்டக்களப்பு மாவட்ட கல்குடா கல்வி வலயத்தில் உள்நாட்டு யுத்தத்தின் கோரப்பிடியில் சிக்கி பின்தங்கிய பாடசாலை மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டி கருத்தரங்கு இன்று(07) வெள்ளிக்கிழமை
மட்/பால்ச்சேனை மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இவ் கருத்தரங்கில்
மட்/வாகரை ம.வி,பால்ச்சேனை ம.வி, கதிரவெளி ம.வி ஆகிய பாடசாலையை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பேரவையின் பொதுச்செயலாளர் ஏ.யோன்சன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் பரீட்சை தோற்றவுள்ள மாணவர்களுக்கான ஆசிச்செய்தியையும் வழங்கினார். தொடர்ந்து பொதுச்செயலாளரினால் தொடர்ந்து வரும் காலங்களில் மிகவும் பின்தங்கிய பிரதேசங்களில் கல்விக்கான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என உறுதியளித்தார்.