மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் பட்டாசு திருவிழா

இலங்கையின் புராதன ஆலயங்களுல் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் ஐந்தாம் நாள் திருவிழா நேற்று இரவு வெகு விமர்சையாக நடைபெற்றது.

வெடித்திருவிழா என பக்தர்களினால் குறிப்பிடப்படும் மட்டக்களப்பு புகையிரத நிலையத்தினால் இந்த ஐந்தாம் நாள் உற்சவம் நடாத்தப்படுகின்றது.

இரவு பட்டுக்கொண்டுவருதல் நிகழ்வுடன் தம்ப பூஜை நடைபெற்று மூல மூர்த்தி பரிபால மூர்த்திகளுக்கு பூஜைகள் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து வசந்த மண்டபத்தில் அலங்காரங்களுடன் வேதபராயணம்,மேள நாதஸ்வர இசைகளுடன் சுவாமிக்கு விசேட பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து உள்வீதியுலாவும் யாக மண்டபத்தில் யாக பூஜையும் நடைபெற்றது.

யாக மண்டப பூஜையினை தொடர்ந்து வெளிவீதி வந்த மாமாங்கேஸ்வரர் அடியார்களுக்கு அருள்பாலித்ததுடன் முத்துச்சப்பறத்தில் ஏறி வானவேடிக்கைகள் பொழிய வெளிவீயுதிலா நடைபெற்றது.

இந்த உற்சவத்தில் ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டு மாமாங்கேஸ்வரரை வழிபட்டமை குறிப்பிடத்தக்கது.