சாதனை படைத்த பன்சேனை பாரி வித்தியாலய மாணவிகளுக்கு முனைப்பு ஸ்ரீலாங்காவின் உதவி.


(சசிதுறையூர்)  அண்மையில் நடைபெற்ற கிழக்கு
மாகாண பாடசாலை மட்டத்திலான
மாணவர்களுக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுப்
போட்டியில் சாதனை படைத்த மாணவிகளுக்கு  முனைப்பு ஸ்ரீலங்கா நிறுவனத்தினால் காலணிகள்,மற்றும் இரண்டு மாதத்துக்கு தேவையான சத்துணவு வழங்கிவைக்கப்பட்டது.

முனைப்பு ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தலைவர் மா.சசிகுமார் அதன் பொருளாளர் இ.குகநாதன் ஆகியோர் பாடசாலைக்கு நேரடியாக விஜயம் செய்து ,  மாணவிகளுக்கு அவர்களின் திறமைகளை தேசிய, சர்வதேசமட்டங்களுக்கு கொண்டு சொல்லும் நோக்குடன் பயிற்சிக்கு தேவையான (ஓட்டத்துக்கான) சப்பாத்துக்கள், சத்துணவு என்பன வழங்கி வைக்கப்பட்டது.  இந்த நிகழ்வின் போது முனைப்பு நிறுவனத்தின் நிருவாக சபை உறுப்பினர் v.துசாந்தன் , அதிபர் செ.ஜமுனாகரன் ,உடற்கல்வி ஆசிரியர் பவளசிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


 மட்டக்களப்பு மேற்கு கல்வி
வலயத்திற்குட்பட்ட பன்சேனை பாரி
வித்தியாலயம், இவ்வருடம் நடைபெற்ற கிழக்கு மாகாண மட்டத்திலான பாடசாலை மாணவர்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில்
ஆறு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு
வெண்கலம் உள்ளடங்கலாக மொத்தமாக எட்டு பதக்கங்களை பெற்று மாகாணத்திலே சாதனைகளை நிலைநாட்டியுள்ளனர்.

உதைபந்தாட்டப்போட்டியில் பெண்கள் அணியினர் முதலிடத்தினையும், 4X400 மீற்றர் அஞ்சல் ஓட்டத்தில் முதலிடத்தினையும், 4x100மீற்றர்
ஓட்டத்தில் மூன்றாம் இடத்தினையும்,
பா.வசந்தினி என்ற மாணவி 400மீற்றர், 800மீற்றர்,1500மீற்றர் போட்டிகளில் முதலிடத்தினையும், இ.கஜந்தி என்ற மாணவி 100மீற்றர், நீளம் பாய்தல்
போன்றவற்றில் முதலிடத்தினையும்,
முப்பாய்ச்சலில் இரண்டாம் இடத்தனையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.