கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிபத்தாவது

மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் இடம்பெற்ற  கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 10 வது  மெய்வல்லுனர்  விளையாட்டுப் போட்டி - 2017 இல் மட்/பட் செட்டிபாளைய மகா வித்தியாலயத்துக்கு இரண்டு தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளன. ஜெய்சங்கர் லக்‌ஷயா எனும் வீராங்கனை 60மீற்றர் மற்றும் 100 மீற்றர் போட்டியில் முதலாமிடத்தைப் பெற்று 2தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளார்.   மேலும், வெற்றிபெற்ற மாணவர்களையும் அவர்களைப் பயிற்றுவித்த பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர் கருணாநிதி மற்றும் உதவிகளை புரிந்த சமூகசேவையாளர்கள் ஆகியோரை பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள்    தமது பாராட்டுக்களை தெருவித்துள்ளனர்.