ஆரோக்கியமான இளைஞர் சமூதாயத்தை கட்டியெழுப்பும் பாரிய பொறுப்பு இளைஞர் சேவை அதிகாரிகளின் கரங்களிலே.












(சசி துறையூர்) கிழக்கு மாகாண தமிழ் பேசும் இளைஞர் சேவை அதிகாரிகளுக்கான இளைஞர் யுவதிகளினுடைய சுகாதார பிரச்சினைகளை கண்டறிந்து ஆலோசனை வழிகாட்டல் வழங்குவதற்க்கான பயிற்சியாளர்களை பயிற்றுவிக்கும் இரண்டு நாள்  வேலைத்திட்டம் திருகோணமலை துளசிபுரம் மனிதவள மையத்தில் கடந்த 26,07.2017ம் திகதி தொடக்கம் 27,07.2017 வரை இடம் பெற்றது. 

இப் பயிற்சிகளை பூர்த்திசெய்த இளைஞர் சேவை அதிகாரிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்து தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி பிரிவின் உதவிப்பணிப்பாளர் ஜனாப் M.L.M.N. நைறுஸ் உரையாற்றினார்,


ஆரோக்கியமான இளைஞர் சமூதாயத்தை கட்டியெழுப்பும் பாரிய பொறுப்பு இளைஞர் சேவை அதிகாரிகளின் கரங்களிலேயே தங்கியுள்ளது,  இன்று எமது இளைஞர் பராயத்தினரிடையே உள்ள பாரிய  பிரச்சினைகள் இளவயதில் போதைப் பொருள்,மது என்பனவற்றுக்கு அடிமையாதல், பாலியல்நோய்கள் மற்றும் தொற்றாநோய்களுக்கு ஆளாதல், இவற்றிலிருந்து இளைஞர்களை விடுவித்து, அந்த மோசமான பழக்கவழக்கத்துக்கு ஆளாகமல் பாதுகாத்து நாட்டுக்கு நல்ல பிரஜைகளை உருவாக்கித்தர வேண்டிய பொறுப்பு இளைஞர்களோடு நெருங்கி செயற்படுகின்ற இளைஞர் சேவை அதிகாரிகள் உங்களாலே முடியும், என உதவிப்பணிப்பாளர் தனதுரையில் குறிப்பிட்டார்.

இந்த பயிற்சி வேலைத்திட்டத்தில் கிழக்கு மாகாண இளைஞர்சேவை அதிகாரிகள் மற்றும் இளைஞர் அபிவிருத்தி பணியில் ஈடுபடும் துறைசார் உத்தியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர்.