வால்கட்டு வீதி கவனிப்பாரற்ற நிலையில்!மண்முனை  தென்மேற்கு பிரதேசசெயலக பிரிவிற்குட்பட்ட வால்கட்டு வீதி  கடந்த வருடம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக பாரீயளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீதியின் ஒரு பகுதி குன்றும் குழியுமாக உள்ளதால் இவ்வீதியால் நாளாந்தம் போக்குவரத்தினை மேற்கொள்ளும் பிரயாணிகள் பல்வேறு அசௌகரியங்களை அனுபவித்து வருகின்றனர்.இது சம்பந்தமாக சம்பந்தப்பபட்ட அதிகாரிகள் எவரும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென பொதுமக்கள் விஷனம் தெருவித்துள்ளனர்.எனவே மிகவிரைவில் இவ்வீதியை புனரமைத்து தருமாறு பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பிரதேச அரசியல்வாதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.