140வது நாளாக முடிவின்றி தொடரும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம்

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் 140வது நாளாகவும் தொடர்ச்சியாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

தமது தொழில் உரிமையை வலியுறுத்தி தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.

தமது நியாயமான கோரிக்கையினை நிறைவுசெய்ய தேவையான முறையான நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொள்ளாத நிலையில் தொடர்சிசியாக போராட்டத்தினை முன்னெடுத்துவருவதாக பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.