கிழக்கு மாகாணத்தில் களைகட்டும் கண்ணகியம்மன் சடங்கு –விழாக்கானும் கிராமங்கள்

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீகண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கின் கலியாணக்கால் வெட்டும் சடங்கு இன்று மாலை சிறப்பாக நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தில் வைகாசி மாதங்களில் கண்ணகி வழிபாடுகள் ஆரம்பமாகிநடைபெற்றுவருகின்றது.

கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கண்ணகி அம்மன் ஆலயங்களின் திருக்கதவுகள் திறக்கப்பட்டு சடங்குகள் நடைபெற்றுவருகின்றது.

அதன்கீழ் மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீகண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு கடந்த சனிக்கிழமை கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.

இன்று மாலை அடியார்கள் புடை சூழ அம்மன் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு புன்னைச்சோலையில் உள்ள வீடு ஒன்றில் கலியாணக்கால் வெட்டும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

வேம்பு மரத்திற்கு விசேட பூஜைகள் நடைபெற்று தெய்வாதிகள் புடை சூழ இந்த நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து வெட்டப்பட்ட கலியாணக்கால் அலங்கரிக்கப்பட்டு வீதியுலா கொண்டுசெல்லப்பட்டு.இந்த நிகழ்வில் பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.