இலங்கை எல்லை கடல் பகுதியில் மீன்பிடிப்போருக்கு வருகின்றது தடை

இலங்கை கடல் எல்லையில் வேறு நாட்டவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான தடை தொடர்பிலும் தடைசெய்யப்பட்டுள்ள மீன்பிடி உபகரணங்கள் தொடர்பான சட்ட மூலம் ஒன்று எதிர்வரும் 06ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்படவுள்ளதாக கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சரும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான மகிந்த அமரவீர தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி –மண்முனைப்பற்று பிரதேச எல்லைப்பகுதியான தர்மபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள பல்லின கடல்வாழ் செட்டை மீன்குஞ்சு உற்பத்தி நிலையம் இன்று காலை திறந்துவைக்கப்பட்டது.

கடற்தொழில் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சும் இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையும் இணைந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுசரனையுடன் ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு விவசாய ஸ்தாபனத்தினால் இந்த கடல் மீன் உற்பத்தி நிலையம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் முதன்முறையாக கடல் மீன் உற்பத்தி நிலையம் மட்டக்களப்பிலேயே அமைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.இதற்காக சுமார் 150மி;;ல்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.சுமார் 4000பேர் மறைமுகமாகவும் நேரடியாகவும் தொழில்வாய்ப்புகளைப்பெறக்கூடியவாறு இந்த பல்லின கடல்வாழ் செட்டை மீன்குஞ்சு உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையத்தில் 8000இலட்சம் மீன்குஞ்சுகளை வருடாந்தம் உற்பத்திசெய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் வருடாந்தம் 8000 தொன் மீன்களை இங்கிருந்து ஏற்றுமதிசெய்யமுடியும்எனவும் இங்கு நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா,கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட்,கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் ,மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

2020ஆம் ஆண்டில் இலங்கையில் அன்னிய செலாவணியை இலங்கைக்கு ஈட்டித்தரும் மூன்றாவது துறையாக மீன்பிடித்துறையை மாற்றும்  வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சரும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான மகிந்த சமரசிங்க இங்கு தெரிவித்தார்.

உமா ஓயா திட்டம் கடந்த கால ஆட்சியாளர்களினாலேயே கொண்டுவரப்பட்டதாகவும் அந்த திட்டம்தொடர்பில் சூழல் மற்றும் அதன் ஏனைய காரணிகள்தொடர்பில் சரியான முறையில் ஆய்வுசெய்யப்படவில்லை.எனினும் 80வீதம் அதன்  பணிகள் பூர்த்தியடைந்துள்ளதன் காரணமாக வெளிநாட்டின் உதவியுடன் தொழில்நுட்பங்களைக்கொண்டு இயற்கையுடன் இணைந்ததாக அதனை முன்கொண்டுசெல்ல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத்த தெரிவித்த அமைச்சர்.

இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார முன்னெடுப்புகளில் கடல்மீனகள் உற்பத்தி செய்வதை பிரதானமாகக்கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். இலங்கையை சூழகடல்வளம் உள்ளபோதிலும் அதனை முழுமையாக பயன்படுத்தி பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கு கடந்த காலத்தில் நாங்கள் தவறிவிட்டோம். இதன் காரணமாகவே இவ்வாறான நிலையங்களை அமைத்து இலங்கையின் பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசா    ங்கம் ஆரம்பித்திருக்கின்றது. ஆதன் ஒரு கட்டமாக இலங்கையில் முதன்முறையாக கடலிலுள்ள அனைத்து மீன்வகைகளையும் உற்பத்தி செய்யும் நிலையத்தினை மட்டக்களப்பில் அமைத்திருக்கின்றோம்.  இதை ஒரு தேசிய நிகழ்வாகவே நான் பார்க்கின்றேன். இந்தத்திட்டத்தின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்காயிரம் பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள முடியும்.

வுடகிழக்கில் கடற்றொழில் அபிவிருத்தி தொடர்பில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் யாவும் அப்பகுதி மக்களின் தொழில் வாய்ப்பு, பிரதேசத்தின் அபிவிருத்தி, பிரதேச மக்களின் வாழ்வாதார மேம்பாடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆகிவற்றினை நோக்காகக்கொண்டே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

முட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தவரையில் ஏழாயிரம் ஏக்கர் காணி மீன்பிடி தொடர்பான செயற்பாடுகளை மேற்கொள்ள முடியுமென்று இனங்காணப்பட்டிருக்கின்றது. இதன்மூலம் இருபதாயிரம் பேர் தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள முடியும். இதற்காக அரசியல்வாதிகளினதும் பொதுமக்களினதும் உதவியை எதிர்பார்த்திருக்கின்றோம்.

குடந்த காலத்தில் 500மில்லியன் ரூபா செலவில் வாகரைப் பகுதியில் மிகப்பெரும் மீன் உற்பத்தி நிலையத்தினை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டபோது அப்பகுதி மக்களும் சில அரசியல்வாதிகளும் அதனை எதிர்த்ததன் காரணமாக அத்திட்டம் மன்னாருக்கு கொண்டுசல்லப்பட்டது. ஆத்திட்டத்தின் மூலம் 15000பேர் தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொள்வார்களென எதிர்பார்க்கின்றோம்.

நூங்கள் ஒரு திட்டத்தினை மேற்கொள்ளும்பொழுது அத்திட்டம் மக்களுக்கு பொருத்தமானதா சுற்றுச்சூழல் பாதிப்புகள் இருக்கின்றதா என்று ஆய்வுகளை மேற்கொண்ட பின்னரே அத்திட்ம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

முட்டக்களப்பு மாவட்டம் இன்னும் முன்னேற்றமடையாத மாவட்டமாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றது. ஆதனை மீன்பிடித்துறை ஊடாக முன்னேற்றும் வகையிலேயே இவ்வாறான திட்டங்களை நாங்கள் இப்பகுதிக்கு வழங்குகின்றோம்.
இந்த நாட்டிலுள்ள ஏனைய துறைகளைவிட மீன்பிடித்துறை இலகுவில் அபிவிருத்தி செய்யக்கூடியதாக இருக்கின்றது. இலங்கை கடலினால் சூழப்பட்டிருக்கின்றபொழுதும் சில மீனினங்களை இறக்குமதி செய்யும் நிலையே இருந்துவருகின்றது.

2020ஆம்ஆண்டில் இலங்கையில் மீன் இறக்குமதியை முற்றாக நிறுத்தி மீனை ஏற்றுமதி செய்யும் செய்யும் நாடாக மாற்றும் வகையில் பல்வேறு திட்டங்கள் முன்nடுக்கப்பட்டுவருகின்றன. ஆதற்கு சாதகமான வகையில் இலங்கை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் தடை செய்யப்பட்டிருந்த ஜி.எஸ்.பி சலுகை மீண்டும் வழங்கப்பட்டிருப்பதன் காரணமாக சர்வதேச ரீதியில் மீன் ஏற்றுமதியை அதிகரிக்க முடியும்.

ஏதிர்வரும் ஆறாம் திகதி இலங்கையின் சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடும் வெளிநாட்டு மீனவர்களை தடுக்கும் நோக்கில் தடை,மற்றும் மீனவர்கள் தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தல் தொடர்பிலான சட்டமூலம்  பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவிருக்கின்றது. இதன்மூலம் அத்துமீறிய மீன்பிடியாளர்களுக்கு 10 மில்லியன் தொடக்கம் 100மில்லியன் வரையான அபராதமும் அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கும் சட்டமூலம் நிறைவேற்றப்படவுள்ளது.