வழக்கு தொடருவதற்கு நிதி வழங்க தயார்



 படுவான்கரைப்பிரதேசத்தில் அடையாளம் காணும் சில பிரச்சினைகளுக்கு வழக்குதொடருவதற்கான நிதியுதவிகளை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம். என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இ.சாணக்கியன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளைஇ வெல்லாவெளி ஆகிய பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட  கொக்கட்டிச்சோலைஇ தாந்தாமலைஇ கடுக்காமுனை, கச்சக்கொடிஇ ,கணேசபுரம், பாலையடிவட்டை, திக்கோடை போன்ற பகுதிகளில் இலவச சட்ட ஆலோசனை சனிக்கிழமை(10) வழங்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கை சட்டக்கல்லூரிஇ இந்து மகாசபை சட்ட மாணவர்களினால்இ இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் அனுசரணையில்இ காணி பிரச்சினை, வீட்டு வன்முறைகள்இ கடன் நிறுவனங்கள் தொடர்பான விழிப்புணர்வு, பெண்கள், சிறுவர்களுக்கெதிராக புரியப்படும் துஸ்பிரயோகங்கள்இ போதைப்பொருளுக்கு அடிமையாதல் போன்ற பல்வேறான பிரச்சினைகளுக்கான சட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதன் ஆரம்ப நிகழ்வில்இ மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி மா.கணேசராசாஇ சிரேஸ்ட சட்டத்தரணி கே.நாராயணபிள்ளைஇ பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ்இ இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இ.சாணக்கியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சட்ட ஆலோசனைகளை சட்டக்கல்லூரி மாணவர்கள்இ கனிஸ்ட சட்டத்தரணிகள்இ சிரேஸ்ட சட்டத்தரணிகள் மக்களுக்கு வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது