போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் மாணவர்களின் கையெழுத்து

(லியோன்)

ஜனதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ்  நாடளாவிய ரீதியில் தற்போது பாடசாலை மட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு செயல்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றது .


இதற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் போதைப்பொருள் ஒழிப்பு செயல்திட்டங்கள் மாவட்ட  பாடசாலை மட்டத்தில்  மே மாதம் 31 ஆம் திகதி முதல் ஜூன் 30 வரை நடைமுறைபடுத்தபட்டுள்ளது.

இதன்கீழ் சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சின் அனுசரணையில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின்  ஏற்பாட்டில்  போதையற்ற சகவாழ்வுடன் கூடிய நாடு  எனும் தொனிப்பொருளில்  மண்முனை வடக்கு 1 பிரதேச  செயலாளர் கே . குணநாதன் தலைமையில்  மட்டக்களப்பு மத்திய கல்லூரியில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு  நிகழ்வு இன்று மட்டக்களப்பில்  நடைபெற்றது.

இதன் போது போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்  மாணவர்களின் சத்திய பிரமான நிகழ்வும் தொடர்ந்து  மாணவர்களின் கையெழுத்து பெறும் நடவடிக்கையும்  முன்னெடுக்கப்பட்டது  

நிகழ்வினை தொடர்ந்து போசாக்கை மேம்படுத்தும் முகமாக மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால்   மாணவர்களுக்கு பசும்பால்  வழங்கப்பட்டது .
  

இந்நிகழ்வில் மாவட்ட  திவிநெகும திணைக்கள 2 பணிப்பாளர் பி .குணரட்ணம் , மாவட்ட திவிநெகும முகாமையாளர் .ஜெ. எஸ் .மனோகிதராஜ் . மண்முனை  வடக்கு  வாழ்வின்  எழுச்சி  அபிவிருத்தி திணைக்கள முகாமைத்துவ  பணிப்பாளர்   திருமதி .  கிரிதராஜ்  நிர்மலா , மண்முனை வடக்கு  வாழ்வின்  எழுச்சி  அபிவிருத்தி  திணைக்கள முகாமையாளர் திருமதி. செல்வி வாமதேவன்  ,பிரதே செயலக பிரதம கணக்காளர் , திவிநெகும  திணைக்கள முகாமையாளர்கள் , வாழ்வின் எழுச்சி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்    பாடசாலை மாணவர்கள் ,ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்