மட்டக்களப்பில் மாபெரும் காணிவேல் ஆரம்பம் -சிறுவர்களை குதூகலப்படுத்தும் பல்வேறு விளையாட்டுகள்

மட்டக்களப்பு வண்ணத்துப்பூச்சி சமாதான பூங்காவின் ஏற்பாட்டில் மாபெரும் காணிவேல் கண்காட்சி நேற்ற மாலை ஆரம்பமானது.

யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான ஆற்றுகை பணியை மேற்கொண்டுவரும் வண்ணத்துப்பூச்சி சமாதான பூங்காவினது பணிகளுக்கான நிதியை திரட்டும் வகையில் இந்த காணிவேல் கண்காட்சி நடாத்தப்படுகின்றது.

மட்டக்களப்பு,ஆரையம்பதி சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை ஆரம்பித்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக சிறுவர்கள் மற்றும் பெரியவர்களைக்கவரும் வகையிலான விசேட பொழுதுபோக்கு வசதிகளைக்கொண்டதாக இந்த காணிவேல் நடாத்தப்படுகின்றது.

இந்த காணிவேல் நிகழ்வின்போது மட்டக்களப்பு மாவட்டத்திற்கென தனிச்சிறப்புக்கொண்ட கலை நிகழ்வுகளும் மேடையேற்றப்படவுள்ளது.

இந்த காணிவேல் கண்காட்சி கூடங்களின் திறப்பு விழா இன்று மாலை வண்ணத்துப்பூச்சி சமாதான பூங்காவின் பணிப்பாளர் அருட்தந்தை போல் சற்குணநாயகம் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரி எஸ்.கருணாநிதி பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்துவைத்தார்.

இன்று மாலை ஆரம்பித்துள்ள காணிவேலானது எதிர்வரும் 01ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளதாகவும் பிற்பகல் 3.00மணி தொடக்கம் இரவு 9.30மணி வரையில் நடைபெறவுள்ளதாகவும் ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்தனர்.