முனைப்பினால் வாகரையில் வாழ்வாதார உதவித்திட்டம்.


முனைப்பு நிறுவனத்தினால் வாகரை கதிரவெளியைச் சேர்ந்த
பெண் தலைமைதாங்கும் குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கு ஆடு
வழங்கிவைக்கப்பட்டது.
யுத்தத்தினால் கணவனை இழந்த நிலையில் கதிரவெளியில்
வசித்துவரும் மூன்று பிள்ளைகளின் தாயான திருமதி புலேந்திரன்
இலட்சுமி பல கஸ்டத்தின்  மத்தியில் கூலி வேலை செய்து
தனது பிள்ளைகளை கல்வி கற்பித்து வருகின்றார்.


இவரால் குடும்பச் செலவுடன் பிள்ளைகளின் கல்வி
நடவடிக்கைக்கான செலவையும் ஈடுசெய்ய முடியாத
நிலையில் உள்ளார்.
இந் நிலையில் இக் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை
கட்டியெழுப்புவதனுடாக பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு
உதவ வாழ்வாதார உதவியாக நான்கு ஆடுகளை நேற்று முனைப்பு ஸ்ரீ லங்கா
வழங்கிவைத்தது.

இவ் உதவியினை முனைப்பு நிறுவனத்தின் இலங்கைக்கான
தலைவர் மாணிக்கப்போடி சசிகுமார் மற்றும் உப தலைவர்
ஜி.ஜீவேந்திரன் ஆகியோர் பயனாளியின் இல்லத்துக்குச்
சென்று வழங்கிவைத்துள்ளனர்.

இந்த தாயின் முயற்சியினால் மூத்த மகள் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்பதுடன், ஒருவர் உயர்தரமும், மற்றயவர் தரம் (10) பத்திலும் கல்வி கற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

குறித்த தாய் கருத்துத் தெரிவிக்கையில் முனைப்பு
நிறுவனத்தின் இவ் உதவியினை தான் சரியான முறையில்
பயன்படுத்தி இதனுடாக ஆட்டுப் பட்டி ஒன்றை உருவாக்கிக்
காட்டுவாகவும் இதற்காக உதவிய புலம்பெயர்
சமூகத்துக்கு என்றுமே நன்றி கடன் தெரிவிப்பதாகவும் தனது மகிழ்ச்சியை தெரிவித்தார்.