பண்பாட்டு மரபுகள் எதிர்கொள்ளும் சவால் சர்வதேச ஆராய்ச்சி மாநாடு

(லியோன்)

போரும் போருக்குப் பின்னருமான காலத்தில் தொட்டுணரா அல்லது அருவப் பண்பாட்டு மரபுகள் எதிர்கொள்ளும் சவால்களும் முக்கியத்துவமும்என்ற தொனிப் பொருளில் சர்வதேச ஆராய்ச்சி மாநாடு மட்டக்களப்பில் ஆரம்பமானது.


உயர்கல்வி அமைச்சின் அனுசரணையுடன் கிழக்குப்பல்கலைக்கழகம் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கலாநிதி எஸ் .ஜெய்சங்கர் தலைமையில் இராஜதுரை அரங்கில் நடைபெற்றது .

சமூகப் பண்பாட்டு பழக்கங்கள் மற்றும் வாழ்வியல் செயற்பாடுகள், போர்க் காலத்திலும் போருக்குப் பின்னரான காலத்திலும் மனித வாழ்வை வடிவமைக்கின்ற பண்பாட்டு மரபுரிமைகள் சவால்கள் எதிர்கொண்டு வருவதுடன் முக்கியமான பங்கினை ஆற்றிவருகின்றன .

அவற்றில் இக்காலத் தேவையை அறியவும் ,உணரவும் கூடிய வகையில் உலக ஆராச்சி மகாநாடு வடிமைக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது .

இந்த மகாநாட்டில் 120 ஆய்வுக் கட்டுரைகள் , கலாச்சார கலைவிழா , கலைப்பண்பாட்டு கண்காட்சிகள்  என்பன  இடம்பெற்றன .

இந்த  மகாநாட்டில் பல்வேறு நாடுகளில் இருந்து பேராசிரியர்கள்  விரிவுரையாளர்கள் , சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுகவ விரிவுரையாளர்கள்,   ,  மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.


இந்த மாநாடு 16,17,18ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளதுடன் தினமும் காலை 9.00மணி முதல் மாலை 9.00மணி வரையில் நடைபெற்றது