செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயம்

(மண்டூர் நிருபர்)  செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயம் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு கதவு திறத்தலுடன் ஆரம்பித்து செவ்வாய் அதிகாலை அதாவது இன்று(13) திருகுளிர்த்தியுடன் நிறைவு பெறுகின்றது.
இவ்வாலயம் மட்டக்களப்பில் உள்ள பிரபல இந்து ஆலயங்களைவிட முன்னுதாரணமாக கல்வி பணிக்காக உதவிபுரிகிறது!
ஈழத்தில் பழமைவாய்ந்த கண்ணகை அம்மன் ஆலயங்களில் புகழ் பெற்று விளங்கும் கண்ணகை அம்மன் ஆலயங்களில் ஸ்ரீலஸ்ரீ செட்டிபாளையம் கண்ணகை அம்மன் ஆலயம், காரைதீவு கண்ணகை அம்மன் ஆலயம், முல்லைத்தீவு வற்றாபளை கண்ணகை அம்மன் ஆலயங்கள் ஒரே காலத்தில் வருடத்தில் திருவிழா நிகழும் ஆலயங்களாக உள்ளது. இந்த ஆலயங்கள் ஈழத்தின் கண்ணகை வழிபாட்டின் உன்னதமான வரலாற்று சான்றுகளை கொண்டுள்ளன. இந்த ஆலயங்களில் ஆரம்ப காலம் தொட்டு இன்று வரையும் தமிழரின் பண்பாட்டு கலையம்சங்களை பாதுகாத்து வருகின்றது.
அந்தவகையில் ஸ்ரீலஸ்ரீ செட்டிபாளையம் கண்ணகை அம்மன் ஆலயம் ஈழத்தில் தமிழரின் ஒற்றுமையினை வரலாற்றுகாலம் தொடக்கம் இற்றைவரை பேனிபாதுகாத்து வருகின்றது. அவற்றுள்  இந்த ஆலயத்தில் ஆறு கிராம மக்கள் ஒற்றுமையாக மூன்று நாள் சடங்கு நிகழ்வை நடாத்திவருகின்றனர். அந்தவகையில் கிரான்குளம், குருக்கள்மடம், செட்டிபாளையம், மாங்காடு, தேற்றாத்தீவு, களுதாவளை கிராமங்கள் இவ் ஆலயத்தினை நிருவகித்து சிறப்பாக பணியாற்றி வருகின்றார்கள். அந்தவகை இவ் ஆலயம் பல்வேறு பட்ட சமூக பணிகளை செய்துவருகின்றபோதிலும் ஒரு சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்காக பல்கலைகழகம் தெரிவாகும் மாணவர்களின் வறுமை நிலைமற்றும் ஏனைய மாணவர்களையும் ஆர்வப்படுத்தும் நோக்கில் புலமைப்பரீசில்களை வருடா வருடம் வழங்கி  வருகின்றார்கள். அத்தோடு பாடசாலை ஐந்தாம் தர மாணவர்களின் புலமைப்பரீட்சையில் சித்தி பெற்ற வறுமை நிலையில் உள்ள மாணவர்களை தெரிவு செய்து அம்மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக உதவிகளை செய்து வருகின்றார். அத்தோடு இவ்வாலத்தை நிருவகிக்கும் கிராமத்தில் உள்ள கலைஞர்கள், சமூகசேவையாளர்கள், சிறந்த கல்விமான்களையும் கௌவுரபடுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு இவ்வாலம் வருடாவருடம் பல இலட்சம் வருமானம் பெறும் ஆலயங்களில் ஒன்றாக இருந்தாலும் கல்வி, சமூகசேவைக்காக வருடா வருடம் பல்வேறு வழிமுறையில் உதவிகள் செய்து வந்தாலும் இவ்வாலயத்தில் இன்னும் பல சேவைகளை சமூகத்தில் ஆற்ற வேண்டிய தார்மீக கடப்பாடு உள்ளது. அந்தவகையில் ஆலயத்தின் பொருளாதார வளர்ச்சியை ஆலயத்தில் உள்ள பௌதீக வளங்களை கொண்டு விருத்தி செய்யமுடியும். அத்தோடு இவ்வாலயம் அமைந்துள்ள பிரதேசத்தில் கல்வி, கலைகலாசாரம் என்பவற்றை இன்னும் பேனிபாதூகாக்க நவீன முறையிலான நுட்பங்களை உட்புகுத்தி தமிழரின் மரபு வழி கலை வடிவங்களை பாதுகாக்கும் வகையில் ஆலயத்தில் பொருத்தமான நூலகம் மற்றும் தொல்பொருள் அரும்காட்சியகம் என்பன உருவாக்கபட  வேண்டும். இவ்வாறான விடயங்களை ஆரம்பிப்பதன் ஊடாக தமிழரின் மரபுவழி பண்பாட்டு கோலங்கள், கலைவடிவங்கள் பாதுகாக்கப்பட்டு எமது அடுத்த சந்ததிகள் எமது மூதாயரின் வரலாற்றையும் அவற்றின் ஊடாக எமக்கு விட்டுசென்ற அரும்பெரும் பொக்கிஷங்களை அறிவதற்கு சிறந்ததாக அமையும்.