இழப்பீடு கோரி மட்டக்களப்பில் ஒருவர் உண்ணாவிரத போராட்டம்

யுத்ததினால் பாதிக்கப்பட்டு இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து சென்ற நிலையில் மீண்டும் இலங்கைக்கு வந்துள்ள ஒருவர் நல்லிணக்கம் தொடர்பான செயலணியின் தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தமக்கான நீதியை வழங்கவும் இழப்பீட்டுக்கான  கோரிக்கைகளை முன்வைத்தும் நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிடத்தொகுதிக்கு அருகில் உள்ள மட்டக்களப்பு புளியந்தீவு  ஸ்ரீ கோட்டடி  பிள்ளையார் ஆலய முன்பாக இந்த  உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் ,

மட்டக்களப்பு ஏறாவூர் எல்லை வீதி பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் கமலேஸ்வரன் கடந்த 2006 ஆம் ஆண்டு புத்தளம் பகுதியில் இருந்தபோது மனித உரிமைகள் செயற்பாட்டாளராகவும் பெண்களுக்கான நீதியை வலியுறுத்தும் குழுக்களுடனும் செயற்பட்டுவரும்போது வெள்ளைவானினால் கடத்த முற்பட்டபோது அதில் இருந்து தப்பி இந்தியாக்கு குடும்பத்துடன் தப்பிச்சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.

மனைவி மற்றும் நான்கு பிள்ளைகளுடன் இந்தியாவில் வாழ்ந்து வருகின்ற  குறித்த நபர்  கடந்த 13 .03.2017  இலங்கைக்கு வந்துள்ளார் .இலங்கை வந்துள்ள இவர் மாதகாலமாக தமது உறவினர்கள் மற்றும் நண்பர்கள்  வீடுகளில் தங்கி இருந்துள்ளார். தமது உடமைகள் அனைத்தும் இழந்துள்ள நிலையில் அதற்கான இழப்பீடுகளை பெற்றுக்கொடுக்க நல்லிணக்கம் தொடர்பான செயலணியின் தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நடவடிக்கையெடுக்கவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

“சந்திரிகா பண்டாரநாயக்க குமாரண துங்க கவனத்திற்கு  காணாமல் ஆக்கப்படுவதிருந்து தப்பி வந்த ஒருவனின் கோரிக்கைகள் எனும் வாசகத்துடன் “ இன்று முதல்
தொடர்  உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குறித்த நபரை மட்டக்களப்பு பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு  அழைத்து முறைப்பாடு பதிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.