கிழக்கிலங்கைத் தமிழ் மக்களின் பண்பாட்டு பாரம்பரியம் நூல் வெளியீட்டு விழா

(லியோன்)

கிழக்கிலங்கைத் தமிழ் மக்களின் பண்பாட்டு பாரம்பரியம்  நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது



 மகுடம் கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாநகரசபையின் அனுசரணையுடன் கலாபூசணம் எஸ் . எதிர்மன்னசிங்கத்தின் கிழக்கிலங்கைத் தமிழ் மக்களின் பண்பாட்டு பாரம்பரியம்  நூல் வெளியீட்டு விழாவும்  பவள விழாவும் (11) ஞாயிற்றுக்கிழமை  மாலை நடைபெற்றது.


மட்டக்களப்பு பொதுநூலகத்தின் கேட்போர் கூடத்தில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் வி .தவராஜா  தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் வைத்திய கலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜா முதன்மை அதிதியாக கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில்  பேராசிரியர் எஸ் . மௌனகுரு , பேராசிரியர் ,செல்வராஜா பேராசிரியர் எஸ் .யோகராஜா  உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் சிறப்பு விருந்தினர்களாக  கலந்துகொண்டனர்.

ஆரம்ப நிகழ்வாக  மங்கல விளக்கேற்றப்பட்டு தமிழ் வாழ்த்து பாடப்பட்டது .இதனை  தொடர்ந்து கலாபூசணம் எஸ் . எதிர்மன்னசிங்கத்தின் கிழக்கிலங்கைத் தமிழ் மக்களின் பண்பாட்டு பாரம்பரியம்  நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த நூல் வெளியீட்டை தொடர்ந்து  முன்னாள் கல்விப்பணிப்பாளர் திருமதி  சுபா சக்கரவர்த்தியினால்  நூல்  நயவுரை  நிகழ்த்தப்பட்டது.

இந்த நிகழ்வில்  இலக்கிய ஆர்வலர்கள்  ,மாணவர்கள்,  இலக்கிய வாதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்