ஒலிபெருக்கி மூலம் வெளியாகும் அதிக சத்தத்தின் காரணமாக மக்கள் அசௌகரியம்.

முஸ்லிம்களின் புனித நோன்பு தற்பொழுது ஆரம்பித்துள்ளதால் காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்களில் பிற்பகல் வேளைகளில் மற்றும் இரவு வேளைகளில் பள்ளிவாசல் ஒலிபெருக்கிகளில் மதபோதனைகள் 1-2மணித்தியாலயங்கள் வரை அதிக சத்தத்துடன் இடம்பெற்று வருவதால் அண்மையில் வசித்து வரும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை அனுபவித்து வருவதாக அறியத்தருகின்றனர்.

சிறுவர்கள் இரவு வேளைகளில் தங்கள் கற்றல் நடவடிக்கைகளை மேற் கொள்வதில் பாரீய இன்னல்களை அனுபவித்து வருவதுடன் முதியவர்களும் பல சிரமங்களுக்கு ஆளாகிவருகின்றனர்.

ஒலிபெருக்கி மூலம் வெளியாகும் அதிக சத்தத்தின் காரணமாக பிரதேச மக்களின் உள ரீதியிலான சுகாதார பாதிப்புக்களுக்கு உள்ளாவதாகவும், இதனை நிறுத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்குமாறும் வேண்டி    நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு மனிதனின் சகவாழ்விற்கு இன்னல்களை ஏற்படுத்துவது பாரீய மனித உரிமை மீறலாகும்.எனவே இவ்விடயத்தில் சிவில் சமூக அமைப்பினர் இந்து அமைப்புக்கள்,சட்டத்துறை சார்ந்தவர்கள் உரிய நடவடிக்கையை மேற்கொள்வது காலத்தின் தேவையாகவுள்ளது.