முதன்முறையாக நடத்தப்பட்ட தேசிய ஹொக்கி சுற்றுப்போட்டி

 (லியோன்)

மட்டக்களப்பு மாவட்டத்தினல்  வரலாற்றில் முதன்முறையாக தேசிய ஹொக்கி  சுற்றுப்போட்டி  (24) ஆரம்பித்து வைக்கப்பட்டது
..



மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹொக்கி விளையாட்டுத்துறையினை ஊக்குவிக்கும் நோக்குடன் இலங்கை ஹொக்கி விளையாட்டு சம்மேளனம்  தேசிய ஹொக்கி  சுற்றுப்போட்டினை  24 ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில்  மட்டக்களப்பில் நடத்தியது


இலங்கை ஹொக்க சங்கத்தின் தலைவரும் கிழக்கு பிராந்திய பிரதிப்பொலிஸ்மா அதிபர் சுமித் எதிரிசிங்கவின்  ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யடவர தலைமையில்   வெபர் விளையாட்டு மைதானத்தில்  ஆரம்பித்து வைக்கப்பட்டது .

இலங்கை ஹொக்கி விளையாட்டு சம்மேளனத்தினால நடத்தப்படுகின்ற  தேசிய ஹொக்கி  சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட , திருகோணமலை மாவட்டம் , பொலிஸ் திணைக்களம் ,இலங்கை போக்குவரத்து சபை , விமானப்படை , சப்பரகமுவ பல்கலைக்கழகம் மற்றும் கடற்படை ஆகிய  07  ஹொக்கி அணிகள் இந்த தேசிய ஹொக்கி சுற்றுப்போட்டியில் பங்குபற்றுகின்றனர் .

இந்த சுற்றுபோட்டியின் ஆரம்ப போட்டிகள்  (24) சனிக்கிழமை நடைபெற்றது . இதன் இறுதி போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெற்றது


இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் அத்தியட்சகர் ஜாகொட ஆராச்சி ,மட்டக்களப்பு உதவி பொலிஸ் அத்தியட்சர் கே.பி.கீர்த்திரத்தின ,மட்டக்களப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி தீகா வதுற , விமானப்படை  கட்டளை அதிகாரி  ,மட்ட்ககளப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் மற்றும்   பிராந்திய பொலிஸ்  உயர் அதிகாரிகள்  ஆகியோர் கலந்துகொண்டனர்.