மூன்றாவது சர்வதேச யோகா தின நிகழ்வு

(லியோன்)

மூன்றாவது சர்வதேச யோகா தின நிகழ்வு (20) இன்று செவ்வாய்கிழமை  மட்டக்களப்பில் நடைபெற்றது .


மட்டக்களப்பு யோகா ஆரோக்கியா இளைஞர் கழகம் ஏற்பாட்டில்  மூன்றாவது சர்வதேச யோகா தின நிகழ்வு யோகா சிகிச்சை நிபுணர் கலாபூசணம் செல்லையா துரையப்பா தலைமையில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் , சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான  ஞா. ஸ்ரீநேசன் , எஸ் .வியாலேந்திரன் , எஸ் .யோகேஸ்வரன்  அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே .கோடிஸ்வரன் , வலயக்கல்வி பணிப்பாளர் கே .பாஸ்கரன் மற்றும் பாடசாலை அதிபர்கள் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் கலந்துகொண்டனர்

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட கல்வி இராஜாங்க அமைச்சர்  உரையாற்றும்  போது அவர் தெரிவிக்கையில் யோகாப் பயிற்சியை நடைமுறைப்படுத்துமாறு கூறி சுற்று நிரூபத்தை சகல பாடசாலைகளுக்கும் அனுப்பினால்  சகல பாடசாலைகளும் அதை நடைமுறைப்படுத்த வேண்டும்  .

தமிழ்ப் பாடசாலைகளில் இப்பயிற்சி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

ஆனால் சிங்களப் பாடசாலைகளில் இதை ஏற்றுக்கொள்வதற்கு தயக்கம் காட்டுவதால் அங்கு இந்த யோகாப் பயிற்சி இல்லை. அனைத்துப் பாடசாலைகளிலும் யோகாப் பயிற்சியை முன்னெடுத்தால்  இளம் சமுதாயத்துக்கு மிகவும் நன்றாக இருக்கும் என்றார்.
அறநெறிப் பாடசாலைகளிலும் கட்டாயமாக யோகாப் பயிற்சி ஆரம்பிக்கப்பட வேண்டும் இது தொடர்பாக அமைச்சிலிருந்து சுற்றுநிருபம் அனுப்பப்பட்டுள்ளது.


உடலையும் உளத்தையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதற்கும் வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்வதற்கும் யோகாப் பயிற்சி உதவும் என தெரிவத்தார்