காத்தான்குடி கடற்கரையில் நடைபெற்ற புனித ரம்ழான் தொழுகை நிகழ்வு

(லியோன்)

 நாடளாவிய ரீதியில் இஸ்லாமியர்கள் புனித ரம்ழான் நோன்பு பெருநாள் பண்டிகையை இன்று (26) கொண்டாடுகின்றார்கள்


புனித ரம்ழான் நோன்பு பெருநாளை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில்  இஸ்லாமியர்கள் வாழ்கின்ற  பிரதேசங்களில் விசேட பெருநாள் தொழுகைகள் இன்று காலை நடைபெற்றன.


இதனை இணைந்ததாக காத்தான்குடி கடற்கரையில் இன்று திங்கள்கிழமை  காலை புனித ரம்ழான்  தொழுகை நிகழ்வுகள்  மற்றும் குத்பா பிரங்கம் என்பன காத்தான்குடி இஸ்லாமிய நிலையத்தின் ஏற்பாட்டில்  நடை பெற்றது.

இங்கு இடம்பெற்ற  பெருநாள் தொழுகையையும் குத்பா பிரசங்கத்தையும் மௌலவி அஷ்ஷெய்க் எம்.எச் எம்  அஸ்பர்  ஹசான் பராஹிர்  நடாத்தி வைத்தார்.


முஸ்லிம்களுக்கான ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பை கடந்த றமழான் மாதம் முழுவதும் கடைப்பிடித்து, இன்று நோம்பு பெருநாளை இஸ்லாமியர்கள் அனுஸ்டிக்கின்றனர்.



இந்த பெருநாள் தொழுகை  நிகழ்வில்  பெருந்திரளா இஸ்லாமியர்கள் கலந்துகொண்டதுடன் தொழுகையின் பின் தமது பெருநாள் வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது