விளாவட்டவானில் மாபொரும் உதைப்பந்தாட்ட சமர்.

(சசி துறையூர்) மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவு விளாவட்டவான்  ராஜா விளையாட்டு கழகத்தின் 47ஆண்டுகள் நிறைவினை ஒட்டி மாபெரும் உதைப்பந்தாட்டம் மற்றும் எல்லே சுற்றுப்போட்டி தொடர் ஒன்றினை  நடாத்தவுள்ளனர்.

வசந்தம் தொலைக்காட்சி மற்றும் வசந்தம் வானொலி ஆகியவற்றின் அனுசரனையுடன் எதிர்வரும் 06.05.2017 மற்றும் 10.05.2017 ஆகிய திகதிகளில் விளாவட்டவான் ராஜா விளையாட்டு மைதானத்தில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இப்போட்டிகளில் பங்குபற்றி வெற்றிபெறும் அணிக்கு பணப்பரிசில்களும் வெற்றிக்கேடயங்களும் வழங்கப்படும் எனவும் போட்டிக்கான ஏற்பாடுகள் மிகச்சிறப்பாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.