கடமையை தூய்மையான உள்ளத்தோடும், சிந்தனையோடும் கண்ணியமிக்க செயற்பாட்டோடு நடைமுறைப்படுத்த வேண்டியவர்களாக இருக்கிறோம்

(லியோன்)

இந்த நாட்டிலே, இந்த மாவட்டத்திலே காணப்படுகின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வாக வரக்கூடிய அத்தனை விடயங்களையும் நடைமுறைப்படுத்தவதற்காகத்தான் அரச உத்தியோகத்தர்களாகிய நாம் அனைவரும் நியமிக்கப்பட்டிருக்கிறோம். எனவே அந்தக்கடமையை தூய்மையான உள்ளத்தோடும், சிந்தனையோடும் கண்ணியமிக்க செயற்பாட்டோடும் நடைமுறைப்படுத்த வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம் என்று மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.


உள்நாட்டலுவல்கள் அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக இலங்கையின் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.  ஆங்கிலேரிடமிருந்து 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றாலும், ஆங்கிலேய முடியின் ஆதிக்கத்திலேயே இருந்து வந்தது. 1972ஆம்ஆண்டு குடியரசு அரசியலமைப்பின் உருவாக்குத்துக்குப்பின்னர் குடியரசாக மாற்றம் பெற்றது. அதன்படி கடந்த 2008ஆம்ஆண்டு முதல் மே மாதம் 22ஆம் திகதி குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு பூராகவும் இந்த நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை (22) காலை தேசியக்கொடியேற்றலுடன் நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்ட செலயகத்தில் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த குடியரசு தின நிகழ்வில், தேசியக் கொடியினை ஏற்றிவைத்தலைத் தொடர்ந்து நாட்டுக்காக உயிர் நீத்தவர்களுக்கான மௌன அஞ்சலியுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. அதனையடுத்து அரசாங்க அதிபரின் சிறப்புரை இடம்பெற்றது .

இதன்போது உரையாற்றிய அரசாங்க அதிபர்  தெரிவிக்கையில் 

தன்னாதிக்கமும் சுதந்திரமும் இறமையுமுள்ளநாடாக இலங்கை பிரகடனப்படுத்தப்பட்டு ஆங்கிலேயே காலனித்துவ ஆட்சியிலுந்து முழுமையாக விடுதலையடைந்து எங்களுடைய இறமையையும், அதனுடைய அதிகாரத்தினையும் நாங்களே தீர்மானித்துக் கொள்ளுகின்ற தனியொரு சக்தியாகப் பிரகடனப்படுத்தப்பட்ட நாள்தான் இன்றைய நாள். இதேபோல் இந்த அரசியலமைப்பிலே ஏற்படுத்தப்பட்ட பல திருத்தங்கள், நிறைவேற்று அதிகார முறைமை. அதN போல் தற்போது ஏற்படுத்தப்பட்ட அந்த நிறைவேற்று அதிகாரத்தினை பாராளுமன்றத்திற்குப் பாரப்படுத்துகின்ற புதிய சட்டத்திருத்தம்.

இவற்றினூடாக இலங்கை என்ற நாடு பல்வேறு அரசியல்திருப்பு முனைகளையும், அரசியல் வரலாறுகளையும் சட்டவாக்கத்தினையும் பெற்று வந்திருக்கிறது.

சட்டவாக்க அதிகாரத்தினைக்கொண்ட பாராளுமன்றம் இருக்கின்ற இந்த நாட்டிலே வாழுகின்ற சகல இனங்களுமு; சமத்துவத்தோடும் சம நீதியோடும் இன ஐக்கியத் தோடும் ஆழப்படவேண்டும் என்பது இடித்துரைக்கப்பட்டிருக்கிறது. 35-40 வருட யுத்தத்தின் பின்னர் கடந்த 8 வருடங்களாக இந்த நாட்டில் அமைதி நிலவுகின்றபோதிலும் பிரதேசத்திற்குப் பிரதேசம், இனத்துக்கு இனம், மதத்திற்கு மதம் வேறுபாடுகளும் பிரச்சினைகளும் தலைதூக்கிக் கொண்டிருக்கின்றன.

இலங்கையிலே வாழுகின்ற அனைவரும் இலங்கையர் என்ற அடையாளப்படுத்தலோடு இந்த நாட்டுக்குள்ளே சமாதானத்துடனும், ஐக்கியத்துடனும் சமத்துவத்துடனும் வாழ வேண்டும் என்பதுதான் இந்தக் குடிமக்களின் ஒரேயொரு அபிலாசையும் எதிர்பார்ப்புமாகும். இந்த சமத்துவம் என்ற விடயம் அரசியலமைப்பிலே கூறப்பட்டிருக்கிறது எனவே இந்த சமத்துவத்தினூடாக எந்தவிதமான பாரபட்சமுமில்லாமல் பிரதேச ரீதியாக இன ரீதியாக மத ரீதியாக பாரபட்சமில்லாமல் பாராளுமன்றத்தினால் கையளிக்கப்பட்ட சட்டவாக்க அதிகாரங்களை நிறைவேற்றுகின்ற அதிகாரிகளாக நாங்களிருக்கின்றோம்.

அரசாங்கம் கொடுக்கின்ற கொள்கைகளை, அரசாங்கம் தீர்மானிக்கின்ற அத்தனை விடயங்களையும் அரசாங்கம் ஏற்படுத்துகிற கருத்திட்டங்களையும், சரியான முறையில் கிடைக்கின்றது என்பதனை உறுதிப்படுத்தவேண்டியது. இந்த மாவட்டததில் பணியாற்றுகின்ற அத்தனை அரச உத்தியோகத்தர்களுக்கும் பாரிய பொறுப்பிருக்கின்றது.

இலங்கையில் ஏறக்குறைய 17 குடிமக்களுக்கு ஒரு அரச உத்தயோகத்தர் என்ற ரீதியில் நாங்கள் கடமையாற்றிக் கொண்டிருக்கிறோம். தற்போது கூட அரச தொழில் கேட்டு பட்டதாரிகள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். 2012ஆம் அண்டு வரையான அத்தனை பட்டதாரிகளுக்கும் இந்த மாவட்டத்தில் ஏறக்குறைய 2200 பட்டதாரிகள் பல்வேறு கொள்கைத்திட்டங்களின் ஊடாக  நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அமைச்சுக்கள் ஊடாக இந்த நியமனங்கள் செய்யப்பட்டிருக்கிற போதும் அந்த அமைச்சினுடைய கொள்கைகளும் திட்டங்களும் சரியாக மாவட்ட மட்டத்தில், பிரதேச மட்டத்தில், கிராம சேவையாளர் மட்டத்திலும் சென்றடையவில்லை என்ற குறைகள் அத்தனை அமைச்சின் செயலாளர்களிடமும் காணப்படுகின்றது.

எனவே எந்த கடமைக்காக நாம் நியமிக்கப்பட்டோமோ, எந்தச் சுமை எம் மீது சுமத்தப்பட்டதோ, எந்த நோக்கத்திற்காக சம்பளம் வழங்கப்படுகிறதோ அதற்குச்சரியாக செய்யவேண்டிய தார்மீகப்  பொறுப்பு அரச உத்தியோகத்தர்களிடமிருக்கிறது.

அந்த வகையில்தான் பல்வேறு சமூகப்பிரச்சினைகள் மாவட்டத்தில் தலைதூக்கியிருக்கின்றன. பாடசாலைகளிலிருந்து விலகும் மாணவர்களின் தொகைகள் அதிகரித்திருக்கின்றன. வறுமை அதிகரித்திருக்கின்றது. மக்களுடைய கடன் சுமைகள் அதிகரித்திருக்கின்றது. வெளிநாட்டக்குச் செல்லுக்கின்ற பெண்களின் தொகை அதிகரித்திருக்கின்றது. வேலையில்லாப்பிரச்சினை அதிகரித்திருக்கின்றது.

இந்த வகையில் இந்த நாட்டிலே, இந்தமாவட்டத்திலே காணப்படுகின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வாக வரக்கூடிய அத்தனை விடயங்களையும் நடைமுறைப்படுத்தவதற்காகத்தான் அரச உத்தியோகத்தர்களாகிய நாம் அனைவரும் நியமிக்கப்பட்டிருக்கிறோம். எனவே அந்தக்கடமையை தூய்மையான உள்ளத்தோடும், சிந்தனையோடும் கண்ணியமிக்க செயற்பாட்டோடும் நடைமுறைப்படுத்த வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்.

அந்த வகையில் இந்த மாவட்டத்தின் வளங்கள் சூறையாடப்படுகின்றன. அரச காணிகள் அடாத்தாகப்பிடிக்கப்பட்டு இந்த மக்கள் தம் வாழும் நிலைமையிலிருந்து மாறிச் செல்லுகின்ற நிலை உருவாகிறது இவ்வாறான நிலைகளிலிருந்து மக்களை வழி நடத்த வேண்டிய அரச உத்தியோகத்தர்கள் தங்களுடைய கடமையைச் சரியாகச் செய்ய வேண்டும் என்பதுதான் சட்டவாக்கத்தின் ஊடாக அளிக்கப்பட்ட பொறுப்பாகும்.

இவற்றினைச் சொல்லுகின்ற போது, செய்கின்ற போது விமர்சனங்களையும் கண்டனங்களையும் மட்டும் செய்வதனால் இந்த மாவட்டத்தினுடைய வளங்கள் பாதுகாக்கப்படாது. மக்களுடைய வாழ்க்கைத்தரம் உயர்த்தப்படாது. எனவே தான் அரச உத்தியோகத்தர்களாகிய அனைவரும் மனச்சாட்சி, இறைவன் ஆகிய இரண்டு விடயங்களுக்குட்பட்டுச் செயற்பாடு உங்களது உண்மையான சேவையையும் கடமைப்பொறுப்பையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.


இந் நிகழ்வில், மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.நேசராசா , மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், பொறியிலாளர் எஸ்.சுமன், திவிநெகும திணைக்கள உதவிப் பணிப்பாளர் எம்.குணரெட்ணம், திணைக்களத் தலைவர்கள், உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.