வாழ்வின் எழுச்சி முகாமையாளர்கள் , வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பனாளிகளை கௌரவிக்கும் நிகழ்வு

(லியோன்)

வாழ்வின் எழுச்சி  முகாமையாளர்கள் , வாழ்வின் எழுச்சி  அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பனாளிகளை  கௌரவிக்கும் நிகழ்வு (29) மட்டக்களப்பில் நடைபெற்றது .


மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட   புளியந்தீவு வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கி வலய பிரிவுகளில் சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம் மற்றும்  சித்திரை புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அதிகூடுதலான நிதியான ஒரு கோடியே 35 ஆயிரம் ரூபாவினை  சேகரிப்பிலும் ,சேமிப்பிலும் ஈடுபட்ட    வாழ்வின் எழுச்சி  முகாமையாளர்கள் , வாழ்வின் எழுச்சி  அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பனாளிகளை  கௌரவிக்கும்   நிகழ்வு  மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே குணநாதன்  தலைமையில் பிரதேச செயலக டேபா மண்டபத்தில்  நடைபெற்றது   .

வருடந்தோறும் சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம் மற்றும் புதுவருட  சேமிப்பினை முன்னிட்டு சமூகங்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நிதியை சேகரித்து அந்த நிதியின் ஊடாக சமூக அபிவிருத்திக்கான வேலைத்திட்டங்களை மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .  

அந்த வகையில்  பெறப்பட்ட நிதி மூலம் பாடசாலை மாணவர்களுக்கான சிசுதெரிய புலமைப்பரிசில்கள் , மருத்துவ உதவி , வீடுகள் திருத்துவதற்கான நிதி உதவி , சுயதொழிலுக்கான  நிதி உதவி மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல் போன்ற பல்வேறு பட்ட வேலைத்திட்டங்களை சமூக அபிவிருத்திக்காக செய்யப்படுகின்றன .

இதற்கு அமைய  கூடுதலான நிதியினை  பெற்றுத்தந்த   வாழ்வின் எழுச்சி  முகாமையாளர்கள் , வாழ்வின் எழுச்சி  அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பனாளிகளை  கௌரவித்து பரிசில்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது .

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக  மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் வி.தவஜாரா மற்றும் பிரதேச செயலக  உதவி பிரதேச செயலாளர் எஸ் .யோகராஜா ,  பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் ஆர் ஜதிஸ்குமார் மாவட்ட  திவிநெகும திணைக்கள பணிப்பாளர் பி .குணரட்ணம் , மாவட்ட திவிநெகும முகாமையாளர் .ஜெ. எஸ் .மனோகிதராஜ் . மண்முனை வடக்கு வாழ்வின்  எழுச்சி  அபிவிருத்தி  திணைக்கள முகாமைத்துவ பணிப்பாளர்   திருமதி .  கிரிதராஜ்  நிர்மலா ,  மண்முனை வடக்கு வாழ்வின் எழுச்சி  அபிவிருத்தி  திணைக்கள  முகாமையாளர் திருமதி. செல்வி வாமதேவன்  ,பிரதே செயலக பிரதம கணக்காளர் , திவிநெகும  திணைக்கள முகாமையாளர்கள் , வாழ்வின் எழுச்சி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்  மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டனர்