மட்டக்களப்பு மாவட்ட மண்முனை மேற்கு இளைஞர் சேவை அதிகாரி க.சசீந்திரன்(சசி) இந்தியா பயணம்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட மண்முனை மேற்குப் பிரதேச இளைஞர் சேவை அதிகாரியும் ஊடகவியலாளருமான கணேசமூர்த்தி சசீந்திரன்(சசி) இன்று 06ஆம் திகதி அதிகாலை இந்திய பயணமானார்.

தேசிய இளைஞர் சேவைகள் மண்றத்தின் இளைஞர் அபிவிருத்தித் திட்டங்களை வினைத்திறமையுடன் செயற்படத்தியமையினால் சிறந்த இளைஞர் சேவை அதிகாரியாக தெரிவு செய்யப்பட்டு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் இப் பயணத்துக்காக இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் செயற்படுத்தப்பட்ட இளைஞர் நிதி அபிவிருத்தி வாரம்,இளைஞர் பாராளுமன்ற வேலைத்திட்டம், மற்றும் வெளி நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளும் இளைஞர் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்தல்,தொண்டர் வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல் உள்ளிட்ட இளைஞர் அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளிட்ட இளைஞர் அபிவிருத்தித் திட்டங்களை அற்பணிப்புடன் முன்னெடுத்து வினைத்திறமையாக செயற்படுத்தி வெற்றபெற்று தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பாராட்டை இவர் பெற்றுள்ளதுடன் இத் திட்டத்தின் கீழ் இந்தியா செல்வதற்கான தெரிவிலும் இடம்பிடித்துள்ளார்.

ஆகில இலங்கை ரீதியாக 12 பேர் இத் திட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் வடகிழக்கில் இருந்து 4 பேர் தெரிவ செய்யப்பட்டுள்ளனர்.இதில் திருகோணமலை மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.என்.நைரூஸ் மற்றும் இவருடன் அம்பாரை யாழ்பாணத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர் சேவை அதிகாரிகள் தெரிவாகியுள்ளனர்.

இந்தியா பயணமாகியுள்ள இவர்கள் பெங்களுரில் இடம்பெறும் இளைஞர் அபிவிருத்தித் திட்டம் தொடர்பான பயிற்சி மற்றும் அனுபவபகிர்வ வேலைத்திட்டத்தில் பங்குகொள்ளவுள்ளதுடன் முக்கிய இடங்களுக்கு விஐயம் மேற்கொண்டு பார்வையிடவும் உள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட மண்முனை மேற்குப் பிரதேச இளைஞர் சேவை அதிகாரியும் ஊடகவியலாளருமான கணேசமூர்த்தி சசீந்திரன்(சசி) மட்டுநியூஸ் செய்தியாளராகவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.இவருக்கு மட்டுநியூஸ்  வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றது.