வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் பூரண கதவடைப்புப் போராட்டத்திற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞரணி ஆதரவு.

(சசி துறையூர்) மட்டக்களப்பு மற்றும் வட கிழக்கு மாகாணங்களில் நாளைய தினம் முன்னெடுக்கப்படும்
 பூரண கதவடைப்புப்
போராட்டத்திற்கும்,
ஆதரவு வழங்குவதற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட
இளைஞரணி ஆதரவு தெரிவித்து பொது மக்கள் மற்றும் இளைஞர்களிடம் இந்த போராட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு  கோரிக்கை விடுத்துள்ளார் இளைஞரணித் தலைவர் கி.சேயோன் .

இது தொடர்பில்
விடுத்துள்ள அறிக்கையில் மேலும்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வடகிழக்கு தாயக பூமியில் விடுதலைப்
புலிகளுக்கு எதிராக இலங்கை
அரசாங்கத்தினால் நடத்தப்பட்ட யுத்தம்
முடிவடைந்து எட்டு வருடங்கள்
நிறைவடைந்தும் தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பில்
எவ்விதமான முன்னேற்றத்தினையும் வெளிப்படுத்தவில்லை இலங்கை அரசு.

இழப்பதற்கு இனி எதுவுமில்லை என்ற நிலையில் பாதிக்கப்பட்ட எம்
மக்கள் தங்களுக்குரிய உரிமைகளை
கேட்டு இன்றும் போராடி வருகின்றனர்.
அதில் குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டோரை
கண்டறிவதற்கான போராட்டம் !
சொந்த நிலத்தை மீட்பதற்கான போராட்டம் !
அரசியல் கைதிகளின் விடுதலை கோரிய
போராட்டம்
காணி அபகரிப்புக்கு எதிரான
போராட்டம்!
மதுவுக்கு எதிரான போராட்டம் !
ஊடகவியலாளர்களின் கொலைகளுக்கு
நீதிகோரிய போராட்டம்!
முதலான போராட்டங்கள் வடக்கு மற்றும்
கிழக்கு மாகாணங்களிலே நீண்ட
நாட்களாக நடைபெற்று வருகின்ற
போதிலும் இப்போராட்டங்கள் அரசினால்
இதுவரையில் கவனத்தில்
கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் அரசினதும்
சர்வதேசத்தினதும் கவனத்தை
ஈர்க்குமுகமாக  சித்திரை
மாதம் 27ந் திகதி வியாழக்கிழமை
வடகிழக்கில் பூரண கதவடைப்புப்
போராட்டம் ஒன்றில் ஈடுபட தமிழ் பேசும்
சமூகம் அனைத்தும்
ஒன்றிணைந்துள்ளன.

இந்தப் போராட்டம் வெற்றியளிக்க வேண்டும். பொது மக்கள் மற்றும் இளைஞர்களிடம் இந்த போராட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு  கோரிக்கை விடுத்துள்ளார்.