சட்டவிரோத துஸ்பிரயோகங்களை கட்டுபடுத்துவதற்கு பொலிசார் மூலம் அதிரடி சோதனை நடவடிக்கை

(லியோன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில்  இடம்பெறுகின்ற துஸ்பிரயோகங்களை கட்டுபடுத்துவதற்கு மட்டக்களப்பு  நீதவான் நீதிமன்ற நீதிபதி  மாணிக்கவாசகர் கணேசராஜாவினால்  துரித  நடவடிக்கை   முன்னெடுக்கப்பட்டுள்ளது    


மட்டக்களப்பில் மாவட்டத்தில்  உள்ள வர்த்தக நிலையங்களில் பணிபுரியும் பெண்பிள்ளைகளுக்கு எதிரான பாலியல் மற்றும் பெண்களுக்கு  எதிரான துஸ்பிரயோகங்கள் தொடர்பில் பிரதி பொலிஸ்மா அதிபருக்கும் மற்றும்  மட்டக்களப்பு  நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜாவுக்கும் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினடிப்படையில்  சட்ட நடவடிக்கை எடுக்க  முடிவு செய்யப்பட்டுள்ளது

இவ்விடயம் தொடர்பில் பொலிஸ் புலனாய்வு துறையினரை பயன்படுத்தி சட்ட நடவடிக்கை எடுக்க மட்டக்களப்பு  நீதவான் நீதிமன்ற நீதிபதி  பிரதி பொலிஸ்மா அதிபர்  பணிப்புரை விடுத்துள்ளார் .

மட்டக்களப்பு பகுதியில் உள்ள  கோவில்கள் , தேவாலயங்கள் ,பள்ளிவாசல்கள் மாறும் விகாரைகள் போன்ற கட்டிடங்கள் அண்மித்த பகுதிகளில் இடம்பெறுகின்ற பாலியல் ரீதியான துஸ்பிரயோக நடவடிக்கைகள் , மதுபான விற்பனை ,போதைவஸ்து பாவனை  போன்ற சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவோரை உடன் கைது செய்ய பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது .


இதேவேளை இவ்வாறான வணக்கஸ்தலங்கள் அண்மித்த பகுதிகளில் உள்ள மதுபான சாலைகளை அகற்றுவது  தொடர்பிலும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவோர் தொடர்பிலும்  பொலிசார் மூலம் அதிரடி சோதனை நடவடிக்கைகளை நடத்தில் சம்பந்தப்பட்டவர்களை உடன் கைது செய்து நீதி மன்றில் ஆஜர் படுத்துமாறு  மட்டக்களப்பு  நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா  பிரதி பொலிஸ்மா அதிபருக்கு  உத்தரவு பிறப்பித்துள்ளார்