மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் சில தினங்களில் பாரிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

(சசி துறையூர்)யுனிசெப் நிறுவனம் மற்றும் பிளான் சர்வதேசம் நிறுவனம் ஆகியன இணைந்து தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்துடன் பதினான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனம் மற்றும்  இளைஞர் கழகங்களின் பங்களிப்புடன் 15  டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் இன்று பி.ப 02.00 மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்தில் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திருமதி ஜே.கலாராணி தலைமையில் இடம் பெற்றுள்ளது.

வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடலில் யுனிசெப் நிறுவனத்தின் அதிகாரிகள்,பிளான் சர்வதேசம் நிறுவனத்தின்  இணைப்பாளர் மற்றும் பிரதேச இளைஞர்சேவை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.