மாநகர சபையினால் நடத்தப்பட்ட சித்திரை புதுவருட கலை ,கலாசார நிகழ்வுகள்

(லியோன்)

சித்திரை  புதுவருடத்தை  முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபையினால் நடத்தப்பட்ட  சித்திரை  புதுவருட  கலை ,கலாசார  நிகழ்வுகள்  இன்று  நடைபெற்றது


மட்டக்களப்பு மாநகர சபையினால்  ஏற்பாடு செய்யப்பட தமிழ் சிங்கள சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு  பாரம்பரிய கலை கலாச்சார விளையாட்டு நிகழ்வுகள்    மாநகர ஆணையாளர் வி .தவராஜா  தலைமையில்  மட்டக்களப்பு    வெபர் மைதானத்தில் நடைபெற்றது

புதுவருட  கலை ,கலாச்சார விளையாட்டு  நிகழ்வில்  பாரம்பரிய  கலாசார விளையாட்டு நிகழ்வாக  மரதன் ஓட்டம்  ,தலையணை சமர் , முட்டி உடைத்தல் , வலுக்கு மரம் ஏறுதல் மற்றும் தமிழர்களின் பாரம்பரிய உணவு கலாசாரத்தினை சமூகத்திற்கு அறிமுகப் படுத்தும் பலகாரச் சந்தை  என பல பாரம்பரிய கலாசார வினோத விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றது .

இந்நிகழ்வில் மாநகர சபை  உத்தியோகத்தர்கள் ,ஊழியர்கள்  என  கலந்து சிறப்பித்தனர் .