மட்டக்களப்பில் முன்னாள் போராளிகளுக்கு விளக்கமறியல்

மட்டக்களப்பு நகருக்கு பஸ்சில் ஆயுதம் கொண்டுவந்த சம்பவத்துடன் தொடர்புபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் நான்கு பேரின் விளக்கமறியல் 06ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

21-02-2017அன்று முல்லைத்தீவில் இருந்து ஆயுதங்கள் சிலவற்றை பஸ்சில் கொண்டுவந்தது தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.அது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டதுடன் கைதுசெய்யப்பட்ட அனைவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இது தொடர்பான வழக்கு இன்று திங்கட்கிழடை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 06ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவினை பிறப்பித்தார்.