மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் ஆலயத்தில் புதுவருட வழிபாடுகள்

2017ஆம் ஆண்டின் ஏவிளம்பி தமிழ் சிங்கள சித்திரைப்புத்தாண்டு வியாழக்கிழமை நள்ளிரவு கோலாகலமாக பிறந்தது.

தமிழ் சிங்கள சித்திரைப்புத்தாண்டு பிறப்பினை தமிழ் மக்கள் பக்தி பூர்வமாக வரவேற்றனர்.

ஏவிளம்பி தமிழ் சிங்கள சித்திரைப்புத்தாண்டு பிறப்பினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள ஆலயங்களில் நேற்று நள்ளிரவு விசேட பூஜைகள் நடைபெற்றன.

கிழக்கிலங்;கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்க பிள்ளையார் ஆலயத்தில் சித்திரைப்புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ இரங்கவரதராஜ குருக்கள் தலைமையில்நடைபெற்ற இந்த விசேட பூஜையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது பூஜைகள் நடைபெற்றதுடன் அடியார்களுக்கு ஆசிர்வாதங்கள் வழங்கப்பட்டதுடன் கைவிசேடமும் வழங்கப்பட்டது.

ஏவிளம்பி தமிழ் சிங்கள சித்திரைப்புத்தாண்டை வரவேற்கும் வகையில் இதன்போது வாழ்த்துகளும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.