நீங்கள் பயப்பட வேண்டாம் நான் இருக்கும்வரை ஒருபோதும் இந்த மாதுபான சாலை வராது.

(சசி துறையூர்) அன்மையில் நடைபெற்ற இளைஞர்களுக்கான நிகழ்வொன்றில் கலந்து கொண்ட  கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் யுவதி ஒருவரினால் கேட்கப்பட்ட கல்குடா மதுபான சாலை தொடர்பான கேள்விக்கு கிழக்குமாகாண சபை முதலமைச்சாரினால்  நீங்கள் பயப்பட வேண்டாம் நான் இருக்கும்வரை ஒருபோதும் இந்த மாதுபான சாலை வராது, என உறுதி வழங்கினார்.

இந்த மதுபானசாலை அமைவதில் வேறுசிலரின் கையாடல்கள் அழுத்தங்கள் , ஏன் மத்திய அரசினதும் அழுத்தம் இருக்கின்றன, எங்களுடைய மாகாணத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் எல்லோருமே இந்த மதுபான சாலை விடயத்திற்கு எதிரானவர்கள். மாகாணத்திற்குள் இது அமைவதனை ஒரு போதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

 எது எப்படி இருந்த போதிலும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்று இந்த மதுபானசாலைக்கு எதிரான தடை உத்தரவினை நிச்சயமாக பெறமுடியும்.