45வது நாளாகவும் தொடரும் மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகளின் போராட்டம்


மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சத்தியாக்கிரக போராட்டம் 45வது நாளாகவும் இன்று வியாழக்கிழமையும் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றது.

குpழக்கு மாகாணசபையும் மத்திய அரசாங்கமும் பட்டங்களை பூர்த்திசெய்த தங்களுக்கு உரிய வேலைவாய்ப்பினை வழங்க நடவடிக்கையெடுக்கவேண்டும் என வலியுறுத்தி பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி தொடக்கம் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

துமக்கான நியமனம் வழங்கப்படுவதற்கான உறுதிமொழிகள் உறுதியானமுறையில் வழங்கப்படும் வரையில் தமது போராட்டம் தொடரும் என வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்தனர்.

முட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டத்தினை தொடர்ந்து வடகிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகின்றனர்.

இது தொடர்பில் பல்வேறு அரசியல் தரப்பினரும் உறுதிமொழிகளை அடுத்தடுத்து வழங்கியுள்ளபோதிலும்இதுவரையில் சாதகமான எழுத்து மூலமான உறுதிமொழிகள் வழங்கப்படாத நிலையில் பட்டாரிகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த நிலையில் பிரதமர் பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை அனுப்பி இரு மாதங்களுக்குள் வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டபோதிலும் அது தொடர்பில் உறுதியான எழுத்துமூலமான பதில்கள் தங்களுக்கு வழங்கப்படவில்லையென பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

45நாட்களை கடந்துள்ள போதிலும் இதுவரையில் தமது பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவில்லையெனவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

வுடகிழக்கில் மட்டுமே பட்டதாரிகள் வேலையற்ற நிலையை எதிர்கொள்வதாகவும் ஏனைய பகுதிகளில் தொழில் துறைகள் பல உள்ளதினால் அவர்கள் இலகுவில் தொழில்களைப்பெற்றுக்கொள்வதாகவும் வடகிழக்கில் அவ்வாறான துறைகள் எதுவும் இல்லாத நிலையில் தாங்கள் எங்கு சென்று தொழில்களைப்பெறுவது எனவும் அவர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.