ஆரையம்பதியில் “ஆரையுர் கண்ணகை - வரலாறும் வழிபாடும்” நூல் இறுவெட்டு வெளியீடு

“மறுகா” வெளியீட்டில், ஆரையம்பதி ஸ்ரீ கண்ணகை அம்பாள் சார்ந்த நூலான ஆரையுர்க் கண்ணகை எதிர்வரும் 12.03.2017 ஞாயிற்றுக்கிழமை கலை 9.50 க்கு ஆரையம்பதி இராம இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலய மண்டபத்தில் மிகச்சிறப்பாக வெளியிடப்படவுள்ளது.

மாவட்டகலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன் அவாகளின் தலைமையில் இடம்பெற இருக்கும் இவ் நிகழ்வில்,அதிதியாக பேராசிரியர் செ.மௌனகுரு,சிறப்பு விருந்தினர்களாக ஆரையம்பதி பிரதேச செயலாளர் திருமதி.ச.நமசிவாயம், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன்,கௌரவ விருந்தினர்களாக மூத்த எழுத்தாளர் நவம்,மூத்த கவிஞர் மூனாக்கானா, மூத்த நாடக நெறியாளர் ஆரையுர் இளவல் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

குறித்த நூலின் நயவுரையை பேராசிரியர் .செ. யோகராசா வழங்கவுள்ளார்.குறித்த நூல் மற்றும் அம்பாளின் பக்தி பாடல்கள் அடங்கிய இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றனர் வெளியீட்டு ஏற்பாட்டுக்குழுவினர்.