மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் மற்றும் அகில இலங்கை ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்க இணைப்பாளர் உட்பட நான்கு பேர் மீது பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 05ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த நான்கு பேரும் 20ஆயிரம் ரூபா பிணையில் செல்லவும் அனுமதிக்கப்பட்டனர்.
பொதுமக்களின் அமைதிக்கும் சமாதானத்திற்கும் பங்கும் ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் நடைபெறலாம், அரச கரும நடவடிக்கைகளுக்கும் குந்தகம் அல்லது இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ளமுற்பட்டதாகம் தெரிவிக்கப்பட்டு பொலிஸாரினால் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தலைவர் ரி.கிஷாந்த் மற்றும் அகில இலங்கை ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்க இணைப்பாளர் தென்னே ஞானானந்த தேரர் சமவுடமைகள் கட்சியின் உறுப்பினர்களான த.கிருபாகரன்,டாக்டர் சி.குமாரகே ஆகியோருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கு இன்று புதன்கிழமை நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது பொதுமக்களின் அமைதிக்கும் சமாதானத்திற்கும் பங்கும் ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் நடைபெறலாம் என்பதனால் மட்டக்களப்பில் நடைபெற்றுவரும் சத்தியாக்கிரக போராட்டத்திற்கு தடைவிதிக்குமாறு கோரப்பட்ட வழக்கு நீதிமன்றினால் தள்ளுபடிசெய்யப்பட்டது.
அரச கரும நடவடிக்கைகளுக்கும் குந்தகம் அல்லது இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ளமுற்பட்டதாக தாக்கல்செய்யப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைசெய்த நீதிபதி வழக்கினை எதிர்வரும் 05ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததுடன் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு சென்று வாக்குமூலத்தை பதிவுசெய்யுமாறும் உத்தரவிட்டார்.
கடந்த 16 நாட்களாக அமைதியான முறையில் தமது நியாயமான கோரிக்கையினை வலியுறுத்தி வேலையற்ற பட்டதாரிகள் காந்தி பூங்கா முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.