இலங்கை இளைஞர்களின் எதிர்காலம் ஆரம்பமாகிவிட்டது

இலங்கை இளைஞர்களின் எதிர்காலம் ஆரம்பமாகிவிட்டது.

இலங்கையினுடைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேசிய நிகழ்வான எட்டாவது யொவுன்புரய நிகழ்வு இன்று 29.03.2017 புதன்கிழமை திருகோணமலை நகரில் பிரமாண்டமான முறையில் ஆரம்பம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் இலங்கை ஜனநாயக சேசலிச குடியரசின் கெளரவ எதிர்கட்சி தலைவருமான இரா .சம்மந்தன் அவர்களின் தலைமையில் நடைபெறும் இந் நிகழ்வின்ஆரம்ப வைபவத்தில் இராஜங்க அமைச்சர் கெளரவ நிரோசன் பெரேரா , கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசிர் அஹமட், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி ஏறந்திக்க வெலியங்கே மற்றும் திருகோணமலை அரசாங்க அதிபர், அதிகாரிகள், மதத் தலைவர்கள் என அதிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

கெளரவ பிரதமரின் தேசிய கொள்கை   மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சின் சிந்தனை வழிகாட்டலின் கீழ் செயற்படுகின்ற தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் எட்டாவது தடைவையாக இந்த பாரிய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


எதிர் காலம் உதயமாகிவிட்டது எனும் கருப்பொருளில் நடைபெறும் இந்த வேலைத்திட்டத்தில் விளையாட்டு பொருளாதார, கலை கலாச்சார , தொழிற்பயிற்சி வேலைத்திட்டங்கள் போட்டி நிகழ்வுகளாகவும் கருத்தரங்குகளாகவும் கண்காட்சியாகவும் இடம்பெறவுள்ளது.

இனமத மொழி பேதமின்றி ஆறாயிரம் இளைஞர்யுவதிகள் பங்குபற்றும் இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் 02.04.2017 ஞாயிற்றுக்கிழமை நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.